ஒலிம்பிக் போட்டியில் கியூட் லவ் ஸ்டோரி’!.. டிவி நேரலையில் சட்டென்று PROPOSE செய்த பயிற்சியாளர்!.. டபுள் ஓகே சொன்ன வீராங்கனை!

டோக்கியோவில் நடைபெற்று வரும் ஒலிம்பிக்கில் வாள்வீச்சு விளையாட்டு வீராங்கனை ஒருவருக்கு அவரது பயிற்சியாளர் நேரலையில் ப்ரோப்போஸ் செய்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

tokyo olympics argentina fencer dramatic proposal coach

அர்ஜென்டினா நாட்டுக்காக வாள்வீச்சு விளையாட்டில் களம் கண்டவர் மரியா பெலன் பெரெஸ் மாரிஸ். 36 வயது வீராங்கனையான இவர், ஹங்கேரி நாட்டின் அன்னாவிடம் 12 – 15 என்ற புள்ளிகள் வித்தியாசத்தில் தோல்வியுற்று வெளியேறினார்.

வாள்வீச்சு விளையாட்டு மூலமாக தான் இருவருக்குமான அறிமுகமும், சந்திக்கின்ற வாய்ப்பும் கிட்டியுள்ளது. இருவரும் அர்ஜென்டினாவுக்காக வாள் வீசி விளையாடி உள்ளனர். அப்போது இருவரும் நட்பாக பழகியுள்ளானர். பின்னர் மாரிஸின் பயிற்சியாளராகி, Saucedo நாளடைவில் அவர்களது நட்பு காதலாக மலர்ந்துள்ளது.

பயிற்சியாளர் Saucedo, மாரிஸின் காதலராக 17 ஆண்டு காலம் இருந்துள்ளார். தற்போது தான் இருவரும் மண வாழ்க்கையில் இணைந்துள்ளனர்.

 

 

இதுகுறித்து Saucedo கூறுகையில், “அவர் போட்டியில் தோல்வியுற்றதும் மிகவும் வருத்தத்துடன் காணப்பட்டார். அவரது வாடிய முகத்தை மாறா புன்னகையுடன் இருக்க செய்யும் நோக்கில் ப்ரோப்போஸ் செய்தேன்” என்று தெரிவித்துள்ளார்.

Contact Us