ஸ்பீடா போனத விட… நடிகை யாஷிகா செய்த ‘இந்த’ தவறு தான்… விபத்துக்கு முக்கிய காரணம்’!.. காவல்துறை விசாரணையில் ‘மேஜர் ட்விஸ்ட்’!!

நடிகை யாஷிகா ஆனந்த் கார் விபத்தில் சிக்கிய சம்பவத்தின் பின்னணியில் தற்போது மேலும் சில திடுக்கிடும் தகவல்கள் வெளிவந்துள்ளன.

யாஷிகாவுக்கு வலது காலில் அறுவை சி்கிச்சை நடந்துள்ள நிலையில், போலீசார் விசாரணையில் விபத்திற்கான அதிர்ச்சிகரமான தகவல்கள் வெளியாகியுள்ளன. யாஷிகா ஓட்டி வந்த கார், டாடா ஹேரியர் வகையைச் சேர்ந்தது. இதன் கூரையில் ஒரு திறப்பு இருக்கும். யாஷிகா, மணிக்கு 140 முதல் 160 கிலோ மீட்டர் வேகத்தில் காரை ஓட்டி வந்ததாக போலீசார் கூறுகின்றனர்.

அதேநேரம் காருக்குள் சத்தமாக பாடல்களை ஒலிக்க விட்டு 4 பேரும் கூச்சலிட்டபடி ஓட்டி வந்ததாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த நிலையில்தான், முன் இருக்கையில் அமர்ந்திருந்த தோழி வள்ளிசெட்டி பவானி, கூரையில் இருந்த திறப்பைத் திறந்து இருக்கையில் ஏறி நின்று கொண்டார்.

மேலும், பாடல்களுக்கு ஏற்ப அவர் நடனம் ஆடியதாகவும் கூறப்படுகிறது. அப்போது அவரது ஆடை, யாஷிகாவின் முகத்தில் பட்டு கண்களை மறைத்திருக்க வேண்டும் என்று சொல்லப்படுகிறது. பதற்றமடைந்த யாஷிகாவின் கட்டுப்பாட்டில் இருந்து விலகிய கார், முதலில் இடது பக்கம் சாலையோரம் உள்ள இரும்புத் தடுப்புகளில் மோதியுள்ளது.

உடனடியாக சுதாரித்துக் கொண்ட யாஷிகா, விபத்தை தடுக்கும் முயற்சியாக காரை வலது பக்கம் திருப்பவே அதிவேகத்தில் சாலைத் தடுப்பில் மோதி பலமுறை கார் உருண்டுள்ளதாக போலீசார் தெரிவிக்கின்றனர். அதே வேளையில், காரின் திறப்பில் வள்ளிசெட்டிபவனி நின்று கொண்டு வந்ததால் மோதிய வேகத்தில் அவர் காரை விட்டு வெளியே துாக்கி வீசப்பட்டு பலத்த காயமடைந்து உயிரிழந்தார் என்று காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பின் இருக்கைகளில் அமர்ந்திருந்த ஆண் நண்பர்கள் சீட் பெல்ட் அணிந்திருந்ததால் பல முறை கார் உருண்டும் சிறிய காயங்களுடன் தப்பி விட்டனர். அதேநேரம் யாஷிகாவும் சீட் பெல்ட் அணியாமல் கார் ஓட்டி வந்ததால் அவருக்கும் பலத்த காயங்கள் ஏற்பட்டதாக முதல்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

இதற்கிடையே, யாஷிகா கார் ஓட்டிச் செல்வது போல, சில விநாடிக் காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகப் பரவி வருகின்றன. அதில் யாஷிகா தனது தோழி வள்ளியோடு இருப்பது போன்ற படங்களும் உள்ளன. ஆனால், இந்த காட்சி, விபத்து நடந்த நாளன்று எடுக்கப்பட்டதா என்பதை உறுதி செய்ய முடியவில்லை.

இந்த நிலையில், யாஷிகாவின் ஓட்டுநர் உரிமத்தை ரத்து செய்ய போலீசார் பரிந்துரைத்துள்ளனர். சிகிச்சையில் உள்ள யாஷிகா, குணமடைந்த பிறகு கைது செய்யப்படலாம் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன. யாஷிகா விபத்து குறித்து சமூக வலைதளங்களி்ல் பல கோணங்களில் விவாதங்கள் நடைபெற்று வருகின்றன. கிழக்கு கடற்கரை சாலையே ஒரு ஆபத்தான சாலை என்றும், அதில் இவ்வளவு வேகத்தில் கார் ஓட்டுவது முட்டாள் தனம் என்றும் பலர் கூறி வருகின்றனர்.

Product Sourcing Made Easy
Alibaba.com

""

Contact Us