இது சினிமா சீன் இல்ல’.. 5 நிமிடத்தில் மொத்த நகரத்தையும் மூடிய புயல்.. மிரள வைத்த வீடியோ..!

சீனாவில் 300 அடி உயரத்துக்கு எழுந்த மணற்புயலில் வீடியோ வெளியாகி அதிர்ச்சியை  ஏற்படுத்தியுள்ளது.

WATCH: 300-feet wall of sandstorm in China video goes viral

சீனாவில் சில தினங்களாக வரலாறு காணாத அளவுக்கு மழை பெய்தது. இதனால் அந்நாட்டின் பல நகரங்கள் வெள்ளக்காடாய் காட்சியளித்தது. இந்த வெள்ளப்பெருக்கில் சிக்கி பலர் உயிரிழந்தனர். 1000 வருடத்தில் இந்த அளவுக்கு மழை பெய்ததில்லை என சீன ஊடகங்கள் தகவல் தெரிவித்தன.

WATCH: 300-feet wall of sandstorm in China video goes viral

இந்த நிலையில் சீனாவில் பிரமாண்ட மணற்புயல் (Sandstorm) எழுந்த வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகியுள்ளது. சீனாவின் வடமேற்கு மாகாணமான கன்சுவில் உள்ள கோபி பாலைவன எல்லையில் டன்ஹூவாங் (Dunhuang) நகரம் அமைந்துள்ளது. இந்த நகரத்தில் சில தினங்களுக்கு முன்பு சுமார் 300 அடி உயரத்துக்கு மணற்புயல் ஏற்பட்டது.

WATCH: 300-feet wall of sandstorm in China video goes viral

அதனால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மக்கள் அனைவரும் பாதுகாப்பாக வீட்டுக்குள் இருக்க அறிவுறுத்தப்பட்டனர். மேலும் விபத்துகளை தவிர்க்க சாலையில் வாகனங்கள் செல்லவும் தடை விதிக்கப்பட்டது. இந்த மணற்புயலால் உயிர் சேதம் ஏதும் ஏற்படவில்லை எனக் கூறப்படுகிறது.

தற்போது இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளது. சுமார் 5 நிமிடத்தில் மொத்த நகரத்தையும் மணற்புயல் சூழ்ந்துள்ளது. திரைப்படக் காட்சிகளில் பேரலை தாக்குவதுபோல் எழுந்த மணற்புயல் காண்போரை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.

Contact Us