நாம தேடிட்டு இருந்த ஆளு ‘இவரு’ தான்…! பயோ-டேட்டாவில் இருந்த ‘அந்த’ ஒரு வார்த்தை…! ‘உடனே இன்டர்வியூக்கு கூப்பிடுங்க…’ – ஐ.டி நிறுவனம் அதிரடி…!

ஐ.டி நிறுவனம் ஒன்று வேலைக்காக விண்ணபித்த ஒருவரின் தனித்திறனை மட்டும் கண்டு அவரை நேர்காணலுக்கு அழைத்த சம்பவம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

someone mentions GOOGLING his unique skills biodata

பொதுவாக வேலை தேடுவதை விட, அந்த வேலைக்காக கொடுக்கப்படும் சுய விவரங்கள் அடங்கிய பயோ-டேட்டாவை உருவாக்கிவதில் பெரும் கவனம் எடுத்துக்கொள்ள வேண்டும். நம்மை முதலில் சந்திக்க தூண்டுவதற்கு காரணமாக இருப்பதே இந்த பயோ-டேட்டா தான்.

அந்த நபர் வேலைக்காக சமர்ப்பித்த தனது பயோ-டேட்டாவில் தனது தனித்திறன்களில் ஒன்றாக ‘GOOGLING’ என குறிப்பிட்டுள்ளார். அவரின் இந்த தனித்திறனால் ஈர்க்கப்பட்ட அந்நிறுவனத்தின் அதிகாரிகள் அந்த இளைஞரை நேர்காணலுக்கு அழைத்துள்ளனர்.

இதனை அந்நிறுவனத்தை சேர்ந்த Cat McGee என்ற சாப்ட்வேர் டெவலெப்பர் ட்விட்டர் தளத்தில் ட்வீட்டாக பதிவேற்றியுள்ளார்.

இந்த செய்தி சமூகவலைத்தளத்தில் பரவி பயோ-டேட்டா எழுதியவரை கொண்டாடி, ட்வீட்டை வைரலாக்கியும் வருகின்றனர். இந்த ட்விட் சுமார் 1,84,000 லைக்குகளையும், 13,200 பேர் ரீட்வீட் செய்யப்பட்டுள்ளது.

 

Contact Us