நடக்க முடியாத மகனுக்காக ரோபோ தயாரித்த தந்தை

 

பிரான்ஸ்-ல் நடக்க முடியாமல் சக்கர நாற்காலியில் முடங்கி இருந்த 16 வயது மகனை, ரோபோட்டிக் இன்ஜினியர் தந்தை, அவர் உருவாக்கிய ரோபோ உதவியுடன் எழுந்து நடக்க செய்துள்ளார். மகன் ஆஸ்கார் வைத்த அன்பு கோரிக்கைக்கு இணங்க, இந்த பிரத்யேக ரோபோவை வடிவமைத்துள்ளார் ஜீன் லூயிஸ் கான்ஸ்டான்ஸா .

இன்னும் பத்தாண்டுகளில் உலகில் சக்கர நாற்காலிகளுக்கு தேவையே இருக்காது என்று நம்பிக்கை தெரிவித்துள்ள ஜீன் , எழுந்து நடக்க முடியாதவற்களுக்காக பாரிஸ்-ல் இது போன்ற ரோபோக்களை தயாரிக்கும் வாண்டெர்க்ராஃப்ட் என்னும் நிறுவனத்தின் நிறுவனர்களில் ஒருவராக உள்ளார்.

Contact Us