இனிமேல் ஆளே இல்லை…. கட்டுப்பாடுகள் தளர்த்தப்படுமா….? நாடளுமன்ற உறுப்பினர்கள் கோரிக்கை…!!

பிரித்தானியா நாட்டில் கடந்த சில வாரங்களாக கொரோனா வைரஸ் பாதிப்பானது படிப்படியாக குறைந்து வருகிறது. இதனை அடுத்து தொழிற்சாலைகள் மற்றும் கடைகளில் உள்ள பொருள்கள் தீர்ந்து பற்றாக்குறை ஏற்படும் நிலை உருவாகி உள்ளது. இதனால் கொரோனா விதிகளை தளர்த்த வேண்டும் என்று நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆளும் கட்சியான பிரதமர் போரிஸ் ஜான்சனிடம் தெரிவித்துள்ளனர்.  இதனை அடுத்து தடுப்பூசி செலுத்துவதினாலும், 5.7 மில்லியன் மக்களுக்கு ஏற்கனவே தொற்று வந்துவிட்டதாலும் இனி தொற்று பரவ மக்கள் இல்லை என அமைச்சர் ஒருவர் கூறியுள்ளார்.

மேலும் 90% மக்கள் முதல் தவணை தடுப்பூசி செலுத்திக் கொண்டுள்ளதால் கூட்ட நோய் எதிர்ப்பு சக்தி கிடைத்துள்ளதாகவும் இனி புதிதாக வரும் வைரஸிடமிருந்து நம்மை காத்துக்கொண்டால் போதுமானதாகும் என்று தெரவித்துள்ளார். அதிலும் குறிப்பாக கொரோனா வைரஸ் உடன் வாழும் சூழல் உருவாகிவிட்டது. இந்த நிலையில் கொரோனா வைரஸினால் எந்த மாற்றமும் ஏற்படபோவதில்லை ஆகவே தேவைப்பட்டால் கொரோனா பரிசோதனை செய்துக் கொள்ளவேண்டும் எனக் கூறியுள்ளார்.

Contact Us