கடல் அலையில் 2,000 வீடுகளுக்கு மின்சாரம் வழங்கும் மிதக்கும் இயந்திரம்- 680 தொன் எடை !

பிரித்தானியாவின் ஸ்காட்லான் தேசத்தில் ராட்சச, மிதக்கும் மின் உற்பத்தி இயந்திரம் ஒன்று கட்டப்பட்டு கடலில் விடப்பட்டுள்ளது. இதன் எடை சுமார் 680 தொன் ஆகும். இதில் உள்ள இரண்டு காத்தாடிகள், கடலில் ஏற்படும் அலை காரணமாக சுழல ஆரம்பித்து. அதனூடாக மின்சாரத்தை உற்பத்தி செய்ய வல்லவை. அதில் இருந்து கிடைக்கும் மின்சாரம், சுமார் 2,000 ஆயிரம் வீடுகளுக்கு செல்லும் என்று கூறப்படுகிறது. மேலும் 15 ஆண்டுகளுக்கு அது எந்த ஒரு கோளாறும் இன்றி செயல்படும் என்றும் கூறப்படுகிறது. எந்த ஒரு செலவும் இல்லாமல் வெறு கடல் அலைகளை வைத்து மின்சாரத்தை இந்த இயந்திரம் தயாரிக்கிறது பார்த்தீர்களா ? பிரித்தானியாவின் …

தொழில் நுட்ப்பத்தை பாராட்டாமல் இருக்க முடியாது. உலகில் பல நாடுகள் கடல் அலையை பாவித்து மின்சாரத்தை உற்பத்தி செய்து வருகிறது. இதில் ஜப்பான் நாடு முன் நிலை வகித்து வருகிறது. ஆனால் ஜப்பானை மிஞ்சும் அளவுக்கு, பிரித்தானியாவின் தொழில் நுட்ப்பம் வளர்ந்துள்ளது.

Contact Us