கோட்டாபய கடற்படை முகாமில் பதற்றம்; கலகமடக்கும் கடற்படையினர் குவிப்பு!

முல்லைத்தீவு மாவட்டத்தின் வட்டுவாகல் பகுதியில் அமைந்திருக்கின்ற கோட்டாபய கடற்படை முகாமுக்கு முன்னால் எதிர்ப்பு நடவடிக்கை இடம்பெற்றுள்ளது.

கடற்படை முகாமிற்கான காணி சுவீகரிப்பு நடவடிக்கைக்காக குறித்த பகுதிக்கு நில அளவை திணைக்கள அதிகாரிகள் சென்றுள்ளனர்.

அதன் போதே அந்த இடத்தில் ஒன்று கூடிய காணி உரிமையாளர்கள் மற்றும் அரசியல் பிரமுகர்கள் இணைந்து காணி அளவீடு செய்ய வேண்டாம் என்ற கோரிக்கையை முன்வைத்து எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்டனர்.

இந்நிலையில் குறித்த பகுதியில் பதற்றமான சூழல் நிலவியுள்ளது. கடற்படை முகாமுக்குள் கலகம் அடக்கும் கடற்படையினரும் வரவழைக்கப்பட்டுள்ளனர்.

Gallery Gallery Gallery Gallery Gallery Gallery Gallery Gallery Gallery Gallery Gallery Gallery Gallery Gallery Gallery

Contact Us