ரிஷாட் பதியுதீன் வீட்டில் பணிப்பெண்களுக்கு நடந்த சித்திரவதைகள்! மற்றுமொரு பெண் வெளிப்படுத்திய தகவலால் பரபரப்பு!

முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீன் வீட்டில் பணிப்பெண்ணாக சேவை செய்யும் போது, சித்திரவதைக்குட்படுத்தப்பட்ட சிறுமி பொலிஸ் விசாரணையின் போது கண்ணீருடன் வாக்குமூலம் வழங்கியுள்ளார் என தென்னிலங்கை ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

சித்திரவதைக்குட்படுத்தப்பட்டதாக கூறப்படும் ஏனைய 11 பெண்களில் ஒரு சிறுமியே இவ்வாறு பொலிஸாரிடம் தகவல் வெளியிட்டுள்ளார். முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீனின் வீட்டின் கழிப்பறையை சரியான முறையில் கழுவவில்லை என்றால் அவரது மனைவி எங்கள் முகத்தை கழிப்பறை கொமட்டிற்குள் அமுக்கி அழுக்கு நீரில் குளிப்பாட்டிவிடுவார். சாப்பிட்டு முடித்த பின்னர் தட்டுகளை சரியாக கழுவவில்லை என்றால் அதில் இருக்கும் அழுக்கு நீரை முகத்தில் வீசுவார் என பாதிக்கப்பட்ட சிறுமி குறிப்பிட்டுள்ளார்.

Contact Us