கறுப்பு புதை குழி தோன்றும் என்று 1915ம் ஆண்டு அயன்ஸ்டான் சொன்னது இன்று நடந்து விட்டது 100 மில்லியனுக்கு அப்பால்…

சுமார் 100 மில்லியன் ஒளியாண்டுகளுக்கு அப்பால், ஒரு சூரியன் எரிந்து முடிந்து, அது கறுப்பு புதை குழியாக மாறியதையும். அங்கிருந்து ஒரு ஒளிக் கீற்று பூமி நோக்கி வந்ததையும் முதல் தடவையாக பிரித்தானிய விஞ்ஞானிகள் கண்டு பிடித்துள்ளார்கள்.  உலகப் புகழ்பெற்ற அல்பேட் அயன்ஸ்டான்(Albert Einstein) என்ற விஞ்ஞானி, இந்த கறுப்பு புதை குழி சம்பந்தமாக பல கோட்பாடுகளை நிறுவியுள்ளார். ஆனால் அவை அனைத்தும் ஒரு பிரம்மை என்று, இன்று வரை வேறு பல விஞ்ஞானிகள் தெரிவித்து வருகிறார்கள். ஒரு சூரியன் எரிந்து முடிந்த பின்னர், அதன் எடை(Mass) சடுதியாக குறைய ஆரம்பிப்பதால், அது ஒரு கறுப்பு வளையமாக மாறி, புதை குழியாக மாறி தனக்கு அருகே உள்ள கிரகங்கள், பாறைகள், விண் கற்கள் என்று அனைத்தையும் உள்வாங்கிக் கொள்ளும். இந்த கருப்பு வளையத்தினுள் செல்லும் பொருட்களுக்கு என்ன நடக்கும் என்பது இதுவரை தெரியாது. அது போலவே,  என்றோ ஒரு நாள் எமது சூரியனும் எரிந்து முடிந்து இறுதியில் கறுப்பு வளையமாக மாறிவிடும்… அப்போது… Source New Scientist : Astronomers see back of a black hole for first time, proving Albert Einstein was right.

அது எமது பூமி, சந்திரன், உட்பட 9 கோள்களையும் உள்ளே இழுத்து விடும். மேலும் சொல்லப் போனால், தோன்றும் கறுப்பு வளையத்தின் சக்த்திக்கு ஏற்ப்ப அது பல மில்லியன் மைல் தொலைவில் உள்ள பொருட்களை கூட ஈர்க்க வல்லது. அதிலும் ஒளியையும்(Light)அது ஈர்க்க வல்லது. ஒரு செக்கனுக்கு 1 லட்சத்தி 66 ஆயிரம் KM வேகத்தில் பயணிக்க வல்ல ஒளியை (புரோட்டோனை) இந்த கறுப்பு வளையம் ஈர்க்க வல்லது என்றால், இது எவ்வளவு சக்த்தி வாய்ந்ததாக இருக்கும் என்று நீங்கள் கற்பனை செய்து பார்கலாம். அது போல 100 மில்லியன் ஒளி ஆண்டுகளுக்கு அப்பால் தற்போது ஒரு கறுப்பு வளையம் தோன்றியுள்ளது.

அதன் பின் புறத்தில் இருந்து தப்பிய  ஒரு ஒளிக் கீற்றும், X-றேயும் பூமியை கடந்து சென்றது. இதனையே விஞ்ஞானிகள் அவதானித்துள்ளார்கள். 1915ம் ஆண்டே கறுப்பு வளையம் தொடர்பாகவும், டைம் ரிலேட்டிவிட்டி(Time relativity)  தொடர்பாகவும் அல்பேட் அயன்ஸ்டான் என்ற விஞ்ஞானி பல கோட்பாடுகளை நிறுவியுள்ளார். அவர் கூறியுள்ள மொத்த விடையமும் மிக மிக துல்லியமானவை என்று தற்போது நீரூபிக்கப்பட்டு வருகிறது. ஒரு காலத்தில் எமது பூமி , சந்திரன், செய்வாக் கிரகம் என்று கிரகங்கள் ஒன்று,  இருந்ததாக கூட இல்லாமல்.  அடையாளம் கூட இல்லாமல் அழிந்து விடும். மனிதர்கள் விண்ணில் ஏவிய, சாட்டலைட் கூட இந்த கரு வளையத்தில் சிக்கி காணமல் போய் விடும். மனிதர்கள் ஏவிய சாட்டலைட் எந்த அளவு தூரம் பயணித்தாலும் சொல்லப் போனால் இந்த கறுப்பு வளையத்தால் ஈர்க்கப்பட்டு விடும்.

ஒரு வகையில் சொல்லப் போனால் நாம் முன்னேறிச் சென்று கொண்டு இருக்கிறோம். ஆனால் ஒரு கட்டத்தில்(முடிவில்) அனைத்தும் பின்னோக்கி இழுக்கப்பட்டும்.  அழிக்கப்படுகிறது. இதுவே உண்மை ஆகும். அந்த இடைவெளிக்குள்,  சில காலம் வாழும் மக்கள்,  மத்தியில் என்ன குழப்பம் எல்லாம் நிலவுகிறது பார்த்தீர்களா ? அடி தடி, வெட்டுப்பாடு, இனவெறி, நில வெறி, மத வெறி, பண வெறி என்று… எண்ணில் அடங்காது…

முற்றும் துறந்தவன் முனிவன் ஆகிறான். அனைத்தும் கற்றுத் தெளிந்தவன் ஞானி ஆகிறான்.   எல்லாமே ஒரு கட்டத்தில் அழிந்து விடும். எனவே இருக்கும் இந்த நிமிடத்தை சந்தோஷமாக கழித்து. எம்மை சுற்றியுள்ளவர்களையும் சந்தோஷமாக வைத்திருந்தால் ஒரு மனத் திருப்த்தியாவது மிஞ்சும்.

அதிர்வுக்காக
கண்ணன்

 

Contact Us