டேஸ்ட் ‘நாக்குல’ ஒட்டிடுச்சு…! ‘ஆறு மாசமா கரெக்டா அந்த நேரத்துக்கு வந்திடும்….!

மதுரை விமான நிலையத்திற்கு செல்லும் சாலையில் உள்ள ஹோட்டலுக்கு நாள்தோறும் தவறாமல் புரோட்டா உண்பதற்காக கோயில் காளை ஒன்று சரியான நேரத்தில் வந்து உண்டு செல்வது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

parotta eats the temple bull daily at the hotel Madurai

மதுரை மாவட்டம் பெருங்குடி பகுதியிலிருந்து விமான நிலையம் செல்லும் சாலையில் தனியார் உணவகம் நடத்தி வருபவர் முருகேசன். சில மாதங்களுக்கு முன்பு இவரது ஹோட்டல் அருகே பெருங்குடி முத்தையா கோயில் காளை ஒன்று நின்றுக் கொண்டிருந்துள்ளது. காளை பசியோடு இருப்பதை அறிந்த முருகேசன் தன்னுடைய ஹோட்டலில் இருந்து பரோட்டா மற்றும் சப்பாத்தி ஆகியவற்றை கொடுத்து சாப்பிட வைத்துள்ளார்.

parotta eats the temple bull daily at the hotel Madurai

பரோட்டாவை சாப்பிட்டுவிட்டு பசியாறி அங்கிருந்து சென்றது. ஆனால் பரோட்டாவின் ருசி அதன் நாவில் ஒட்டிக்கொண்டது. எனவே, தொடர்ந்து இந்த ஹோட்டலுக்கு வருவதை வாடிக்கை ஆக்கிக் கொண்டது.

parotta eats the temple bull daily at the hotel Madurai

தினம் ஹேட்டலுக்கு வந்து  உரிமையாளர் தனக்கு பரோட்டா தரும்வரை அங்கிருந்து செல்லாமல் பொறுமையாக காத்திருக்கிறது. பரோட்டாவின் ருசி பிடித்துப்போய் கோயில் காளை தினம் வருவதை புரிந்துகொண்ட ஹோட்டல் உரிமையாளர் முருகேசன் நாள்தோறும் அந்த காளைக்கு தனியாக 20 பரோட்டா உண்ண அளித்து வருகிறார்.

கோயில் காளைக்கு தினம் உணவளிக்கும் ஹோட்டல் உரிமையாளரின் மனிதநேய செயலுக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.

Contact Us