மற்றுமொரு கொடூர சம்பவம்! 15 வயதுச் சிறுமி பாலியல் துஷ்பிரயோகம் – தந்தை மகன் கைது

 

மொரட்டுவ பகுதியில் இரண்டு வாரங்களுக்கு முன் காணாமல் போன 15 வயதுச் சிறுமி ஒருவர், பாலியல் துஷ்பிரயோகத்துக்குள்ளாக்கப்பட்ட நிலையில் மீட்கப்பட்டுள்ளார். மேலும், சம்பவத்தில் பாலியல் துஷ்பிரயோகம் செய்தமை, மற்றும் அதற்கு உதவியமை தொடர்பில் 25 வயது மகனும், 42 வயது தந்தையும் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று மொரட்டுவ பொலிஸார் தெரிவிக்கின்றனர். குறித்த சிறுமியை காணவில்லை என அவரது பாட்டியால் கொடுக்கப்பட்ட முறைப்பாட்டின் அடிப்படையில் விசாரணைகள் இடம்பெற்றுள்ளன.

இதில் குறித்த சிறுமியும், 25 வயது இளைஞனும் பேஸ்புக் மூலம் நட்பாகி, பின்பு காதலாக மாறியுள்ளமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. சிறுமியின் தாய் வெளிநாட்டில் உள்ள நிலையில், தந்தை போதைக்கு அடிமையாகி வீட்டை விட்டு வெளியேறியுள்ளார். இந்த நிலையில் பாதிக்கப்பட்ட சிறுமி குறித்த இளைஞனுடன் வெளியேறியுள்ளார் என்பது, வீட்டிற்கு அருகில் பொருத்தப்பட்டு இருந்த சிசிடிவி கெமராவில் பதிவாகி உள்ளது.

இதையடுத்து மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில் சிறுமி மீட்கப்பட்டுள்ளதுடன், தந்தை மற்றம் மகன் சிக்கியுள்ளனர். துஷ்பிரயோகம் செய்யப்பட்டதாகக் கூறப்படும் சிறுமி மருத்துவ பரிசோதனைக்காக கொழும்பு தெற்கு போதனா மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார். கைதானவர்கள மொரட்டுவ நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

Contact Us