2 வருஷமா கோர்ட்டில் ‘வாதாடிய’ வக்கீல்…! ‘ஒரு லெட்டரில் வந்த தகவல்…’ மேலும் ஒரு அதிர்ச்சி…!

கேரளாவில் சட்டம் படிக்காமலே இரண்டு வருடம் வழக்கறிஞராக பணியாற்றிய நபரை போலீசார் தேடிவருகின்றனர்.

Police Kerala looking woman worked lawyer without studying

கேரள மாநிலம் ஆலப்புழாவை சேர்ந்தவர் ஜெசி சேவியர். இவர் சட்டம் படிக்காமலேயே போலியாக பார் கவுன்சிலில் பதிவு செய்து, கடந்த 2 ஆண்டுகளாக நீதிமன்றத்தில் வாதாடி வந்துள்ளார்.

இந்த புகாரை ஏற்ற பார் கவுன்சில் நடத்திய விசாரணையில் அவர் வேறு ஒரு வழக்கறிஞரின் பதிவு எண் மூலம் பயிற்சி மேற்கொண்டது தெரியவந்தது. இதையடுத்து சேவியர் மீது காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

புகாரின் பெயரில் போலீசார் ஜெசி சேவியரை விசாரிக்க தேடும் போது தப்பிச்சென்று தலைமறைவாகிவிட்டார்.

தப்பி சென்ற சேவியர் தரப்பில் கேரள உயர்நீதிமன்றத்தில் முன்ஜாமீன் கோரி மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

அந்த மனுவில், குடும்ப சூழல் காரணமாக பட்டம் முடிக்க முடியவில்லை என்றும் வழக்கறிஞர் கவுன் அணியாமல் நீதிமன்றத்தில் பயிற்சி எடுத்ததாகவும், குற்றம்புரியாத பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்திருப்பதாகவும் மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் கேரளாவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Contact Us