13 மாதத்தில் 3வது முறையாக கொரோனா தொற்று; மருத்துவருக்கு வந்த சோதனை!

மும்பையை சேர்ந்த 26வயது பெண் மருத்துவர் ஒருவருக்கு கடந்த 13 மாதங்களில் 3 முறை கொரொனா தொற்று ஏற்பட்டுள்ளது. நான்காவது முறை கொரோனா தொற்று ஏற்படாதவாறு முன்னெச்சரிக்கையுடன் நடந்துக் கொள்வேன் என நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

மும்பையைச் சேர்ந்த பெண் மருத்துவர் ஸ்ருஷ்டி ஹலாரி வயது 26. மும்பையில் உள்ள வீர சர்வார்கர் மருத்துவமனையில் மருத்துவராக பணியாற்றி வருகிறார். மூன்றாவது முறையாக தனக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது ஆச்சர்யமாக இருக்கிறது என ஸ்ருஷ்டி ஹலாரி கூறியுள்ளார். இவர் கடந்தாண்டு ஜூன் மாதம் 17-ம் தேதி முதல்முறையாக கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளார்.

அப்போது அவர் கோவிட் மையத்தில் பணியில் இருந்தார். சக ஊழியரின் ஒருவரால் இவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. பணியில் இருந்த மருத்துவர்கள் எல்லாம் ஒன்றாக உணவு அருந்தியுள்ளனர். அப்போது அவருக்கு கொரோனா தொற்று இருப்பது தெரியவில்லை. அடுத்தநாள் அந்த நபருக்கு தொற்று ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து இவரை பரிசோதனை செய்ததில் இவருக்கு தொற்று பாதிப்பு இருந்ததால் வீட்டில் தனிமைப்படுத்திக்கொண்டார்.

இந்தாண்டு மே மாதம் இவருக்கு காய்ச்சல் இருந்துள்ளது. பரிசோதனை செய்ததில் கொரோனா இருப்பது உறுதியானது. இதனையடுத்து சிகிச்சை எடுத்துக்கொண்டார். இந்நிலையில் மூன்றாவது முறையாக ஜூலை மாதத்தில் தொற்று ஏற்பட்டுள்ளது. இந்த முறை அவரது தாயாருக்கு முதன்முறையாக தொற்று இருப்பது கண்டறியப்பட்டது. அதன்பின்னர் இவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.

இரண்டு மற்றும் மூன்றாவது முறையாக கோவிட் தொற்று ஏற்பட்ட போது நிறைய சிரமங்களை எதிர்க்கொண்டுள்ளார். அவரது உடல்நிலை மோசமாக இருந்துள்ளது. கடுமையான தலைவலியை எதிர்க்கொண்டுள்ளார். அன்றாட வேலைகளை செய்வது கூட சிரமமாக இருந்துள்ளது. தொடர்ந்து ஓய்வில் இருந்து வருகிறார். கொரோனா தடுப்பூசி இரண்டாவது டோஸை அவர் செலுத்திக்கொண்டார்.

இதுகுறித்து பேசியுள்ள ஸ்ருஷ்டி ஹலாரி, “ நான் ஒரு மருத்துவராக இருக்கிறேன். கொரோனா தொற்று ஏற்படாமல் எப்படி தற்காத்துக்கொள்ள வேண்டும் என நோயாளிகளுக்கு அறிவுரை வழங்குகிறேன். இருந்தும் நானே தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளேன். பெரிய அளவில் எனக்கு நோய் அறிகுறிகள் இல்லை. இரண்டாவது தொற்று ஏற்பட்டு 45 நாளில் 3-வது முறையாக தொற்று ஏற்பட்டுள்ளது. என்னால் என் குடும்பத்தினருக்கு தொற்று ஏற்பட்டுள்ளது. ஆரம்பத்திலே நாங்கள் சிகிச்சை எடுத்துக்கொண்டோம். நல்ல வேளையாக நுரையீரல் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. இனி நான்காவது முறையாக கொரோனா பாதிப்பு ஏற்பட விட மாட்டேன் என நம்பிக்கையுடன் கூறுகிறார்.

தடுப்பூசி எடுத்துக்கொண்ட பிறகு பாதிப்பு ஏற்படாது என கூறமுடியாது. அதன்பின்னரும் கொரோனா பாதிப்பு ஏற்படலாம் ஆனால் நோயின் தாக்கம் குறைவாக இருக்கும். மோசமான பாதிப்புகளில் இருந்து தடுப்பூசி உங்களை காக்கும்” என மருத்துவ வல்லுநர்கள் கூறுகின்றனர்.

Contact Us