நடிகை ஷகீலா இறந்துவிட்டாரா? பதறியடித்து பேசிய நடிகை!

குக் வித் கோமாளி 2 நிகழ்ச்சியில் யாரும் எதிர்ப்பார்க்காத வண்ணம் ஒரு போட்டியாளராக கலந்துகொண்டவர் நடிகை ஷகீலா.

இந்நிகழ்ச்சிக்கு முன் அவரை மக்கள் பார்க்கும் கண்ணோட்டம் வேறு மாதிரி இருந்தது. ஆனால் இந்த நிகழ்ச்சியின் மூலம் அவரை பலரும் அம்மா என அழைக்க ஆரம்பித்துவிட்டனர்.

அவரே பல பேட்டிகளில் குக் வித் கோமாளி 2 நிகழ்ச்சி தனக்கு பெரிய மாற்றத்தை கொடுத்துள்ளது என்று கூறியிருப்பார்.

இப்படி அவரது வாழ்க்கை சந்தோஷமாக போய்க்கொண்டிருக்கும் நேரத்தில் யாரோ அவர் இறந்துவிட்டதாக வதந்தி பரப்பியுள்ளார். இதனால் ஷகீலாவுக்கு பலரும் போன் செய்து விசாரித்துள்ளார்கள்.

உடனே நடிகை ஷகீலா தான் நலமுடன் மிகவும் சந்தோஷமாக இருப்பதாக வீடியோ வெளியிட்டுள்ளார்.

Contact Us