சார்பட்டா லாபம் மட்டும் இத்தனை கோடிகளா.. பிரமாண்டமான வெற்றி!

பா. ரஞ்சித் இயக்கத்தில் ஆர்யா நடிப்பில், குத்து சண்டையை மையமாக கொண்டு, நேரடியாக அமேசான் பிரைமில் வெளியான திரைப்படம் சார்பட்டா பரம்பரை.

மிகப்பெரிய எதிர்பார்ப்பில் வெளியான இப்படத்தில், பசுபதி, ஜான் கொக்கன், துஷாரா விஜயன், கலையரசன் உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடித்திருந்தனர்.

சிறந்த கதைக்களம், ஒவ்வொரு காட்சியின் வடிவமைப்பு, சிறந்த நடிப்பு என்று ரசிகர்கள் மத்தியிலும், பிரபலங்கள் மத்தியிலும் இப்படம் தொடர்ந்து பல பாராட்டுகளை குவித்து வருகிறது.

இந்நிலையில் ஓடிடி-யில் வெளியான சார்பட்டா பரம்பரை திரைப்படம் சுமார் ரூ. 14 கோடி லாபம் கொடுத்துள்ளதாம். மேலும், ரூ. 24 கோடிக்கு உருவான இப்படம் சுமார் ரூ. 38 கோடிக்கு மொத்த பிசினஸ் செய்துள்ளதாக தெரியவந்துள்ளது.

இதனால், சார்பட்டா திரைப்படம் மாபெரும் வெற்றியடைந்துள்ளது என்று திரை வட்டாரங்கள் தெரிவிக்கின்றனர்.

Contact Us