விஜய் சாங்ல வார்னர் செய்த சேட்டை…’ அவர் முகத்துக்கு பதிலா என் ‘ஃபேஸ்’ இருந்தா ‘எப்படி’ இருக்கும்…!

இன்ஸ்டாகிராம் ரீல்ஸ்ஸில் அசத்தி வரும் ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் டேவிட் வார்னர் நடிகர் விஜய் போல நடனம் ஆடி வீடியோ வெளியிட்டுள்ளார்..

David Warner dances like actor Vijay on Instagram reels

ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரரான டேவிட் வார்னர் ஐபிஎல் போட்டிகள் மூலம் இந்திய அளவில் பிரபலமானார். கிரிக்கெட் போட்டிகள் மட்டுமல்லாது சமூக வலைதளங்களிலும் அதிக ரசிகர்களை வைத்துள்ளார்.

முக்கியமாக அவரின் இன்ஸ்டாகிரம் ரீல்ஸ். வார்னர் பாலிவுட் முதல் கோலிவுட் வரை அனைத்து மொழிகளிலும் வரும் ட்ரெண்டிங் பாடல்களுக்கு ரீல்ஸ் செய்வார்.

வார்னர் மட்டுமல்லாது அவரின் மனைவி, இரு பிள்ளைகள் செய்த ரீல்ஸ் எல்லாம் மில்லியன் கணக்கில் லைக்ஸ் பெற்று ட்ரெண்டிங் ஆனது. இப்போது ரீல்ஸ் மட்டுமல்லாது திரைப்படங்களில் வரும் கதாநாயகர்களின் முகங்களுக்கு பதிலாக தனது முகங்களை அதில் இடம்பெறச் செய்து அவர் வெளியிடும் விடியோக்கள் வைரலாகி வருகிறது.

தமிழ்படங்களான  ‘அண்ணாமலை’ ரஜினி, ’24’ பட சூர்யா, ‘பாகுபலி’, ‘கேஜிஎஃப்’ என அவர் பதிவிடும் விடியோக்கள் ரசிகர்களை பெரிதும் கவர்ந்து வருகின்றன.

அந்த வரிசையில் இப்போது இளைய தளபதி விஜய் நடித்த ‘தெறி’ படத்தில் விஜய் – சமந்தா நடனமாடும் செல்லக்குட்டி பாடலில் விஜய்யின் முகத்தை தனது முகமாக மாற்றி அவர் விடியோ வெளியிட்டுள்ளார்.

நடிகர் விஜய் அவர்களின் ரசிகர்களும் இந்த வீடியோவை வைரலாக்கி டேவிட் விஜய், ஜோசஃப் வார்னர் என ரசிகர்கள் கமென்ட் போட்டு வருகின்றனர்.

 

Contact Us