அப்படி என்னங்க அவசரம்…! செல்போன்ல ‘என்ன’ பார்த்திட்டு ‘பைக்’ ஓட்டுறார்னு தெரியுதா…? – வைரலாகும் வீடியோ…!

கோவையில் இருசக்கர வாகனத்தில் செல்லும் போது சீரியல் பார்த்துக்கொண்டே வண்டி ஒட்டிய நபரின் வீடியோ வைரலாகி வருகிறது.

Coimbatore driving a motorcycle watching a serial went viral

உலகளவில் சாலை விபத்து மூலம் இறப்பவர்களின் சதவீதம் ஆண்டுதோறும் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. இதுகுறித்து நடத்தப்பட்ட ஆய்வில் சாலை விபத்திற்கு முக்கிய காரணங்களில் ஒன்றாக செல்போன் உள்ளது.

இந்த சம்பவம் கோவை காந்திரபுரம் புதிய மேம்பாலத்தில் நடந்துள்ளது. இரவு நேரத்தில் பாலத்தில் தனது இரு சக்கர வாகனத்தை ஓட்டிக்கொண்டே பைக்கில் ஸ்டாண்ட் போல செட் செய்து செல்போனை அதில் வைத்து சீரியல் பார்த்து வந்துள்ளார்.

இந்த செயலை அப்பாலத்தில் சென்ற மற்றோரு நபர் வீடியோவாக எடுக்க, அது சமூகவலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

இந்த வீடியோ வைரலாகவே முதற்கட்ட விசாரணையில் வண்டி முத்துசாமி என்பவர் பெயரில் உள்ளது என தெரியவந்ததுள்ளது.

Contact Us