என்னை எதுக்கு கடன்காரன்னு சொல்றீங்க?’.. கடன் கொடுத்த வங்கிகளை… கலாய்த்து தள்ளிய விஜய் மல்லையா!.. பின்னணி என்ன?

கடனை திரும்பிச் செலுத்திய பின்பும் என்னை கடன்காரர் என்கிறது வங்கிகள் என்று தொழிலதிபர் விஜய் மல்லையா கூறியிருப்பது வைரலாகி வருகிறது.

vijay mallya mocks banks for saying he owes them money

இந்திய வங்கிகளில் கடன் வாங்கிவிட்டு பிரிட்டனுக்கு தப்பிச் சென்ற தொழிலதிபர் விஜய் மல்லையாவின் சர்வதேச அளவிலான சொத்துகளை முடக்க பிரிட்டன் உயர்நீதிமன்றம் சமீபத்தில் உத்தரவு பிறப்பித்திருந்தது. விஜய் மல்லையாவுக்கு எதிராக திவால் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதால், அவரது சொத்துகளை முடக்க இந்திய வங்கிகளுக்கு நிபந்தனையற்ற அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், விஜய் மல்லையாவின் கிங்ஃபிஷர் ஏர்லைன்ஸ் (Kingfisher Airlines) நிறுவனத்திடம் இருந்து ஐடிபிஐ (IDBI) வங்கிக்கு வரவேண்டிய நிலுவைக் கடன் மொத்தமும் மீட்கப்பட்டதாக அவ்வங்கி அறிவித்துள்ளது. இதுதொடர்பான செய்தி ஒன்றை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டிருக்கும் விஜய் மல்லைய்யா, “கடனை திரும்பிச் செலுத்திய பின்பும் என்னை கடன்காரர் என்று வங்கிகள் சொல்கிறது” என்று ட்விட் செய்திருக்கிறார்.

 

 

 

Contact Us