வெடிகுண்டு தாக்குதலில் பரிதாபமாக உயிரிழந்த கால்பந்து வீரர்கள்!

 

சோமாலியாவில் கிளப் அணிகளுக்காக விளையாடும் கால்பந்து வீரர்கள் சென்ற பேருந்தில் வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்பட்டது. சோமாலியாவில் கிளப் அணிகளுக்காக விளையாடும் கால்பந்து வீரர்கள் சென்ற பேருந்தில் வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்பட்டது. இந்த தாக்குதலில் வீரர்கள் 4 பேர் கொல்லப்பட்டனர்.

5 பேர் படுகாயம் அடைந்தனர். சோமாலியாவின் தெற்கு பகுதியில் உள்ள கிஸ்மாயோ நகரத்தில் உள்ள மைதானத்திற்கு கிளப் போட்டியில் பங்கேற்க சென்ற போது இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

இந்த தாக்குதலுக்கு இதுவரை எந்த இயக்கமும் பொறுப்பேற்கவில்லை. சோமாலியாவில் நீண்ட இழுபறிக்குப் பிறகு தேர்தல் தொடங்கியுள்ளது. முதல் மாகாணமாக ஜுபாலந்த் பகுதியில் வாக்குப்பதிவு இந்த வாரம் தொடங்கியது.

தேர்தலை இடையூறு செய்வோம் என்று அல் கொய்தா இயக்கத்துடன் தொடர்பு உடைய அல் சபாப் ஜிகாதிஸ் குழு மிரட்டல் விடுத்து இருந்தது குறிப்பிடத்தக்கது.

Contact Us