வனிதா மன்னிப்பு கேட்க வேண்டும்…. நடிகர் நகுல் கோபம்….!!!

 

நடிகை வனிதா விஜயகுமார் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று நடிகர் நகுல் கூறியுள்ளார். தமிழ் சினிமாவில் நீண்ட ஆண்டுகளாக இருந்து வருபவர் நடிகை வனிதா. விஜய் டிவியில் ஒளிபரப்பான குக் வித் கோமாளி மற்றும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டதன் மூலம் இவர் மிகவும் பிரபலம் அடைந்து விட்டார். இதை தொடர்ந்து அவர் தற்போது பிக்பாஸ் ஜோடி என்ற நிகழ்ச்சியிலும் பங்கேற்று வந்தார்.

கடந்த வார எபிசோடில் நடிகை வனிதா நடுவர்களிடம் சண்டையிட்டு செட்டை விட்டு வெளியேறினார். இந்நிகழ்வு குறித்து அவர் மட்டுமே பேசி வந்த நிலையில் தற்போது இந்நிகழ்ச்சியின் மற்றொரு நடுவராக இருந்த நகுல் இதை பற்றி பேசியுள்ளார். அப்போது அவர் கூறியதாவது, நடிகை வனிதா ஆடிய நடனம் குறித்து நாங்கள் தன்மையாக தான் கமெண்ட் கூறினோம்.

ஆனால் அவருக்கு மற்றவர்களுடன் ஒப்பிட்டு பேசுவது பிடிக்கவில்லை. மேலும் அம்மன் வேடம் போட்டுக்கொண்டு எங்களைப்பற்றி செட்டில் அவர் அசிங்கமாக பேசியதாக அங்கு இருந்தவர்கள் கூறினார்கள். ஆகையால் அவரைப் பற்றி பேசக்கூட நான் விரும்பவில்லை. என்னைக்கூட விடுங்கள். நடிகை ரம்யா கிருஷ்ணன் எவ்வளவு பெரிய நடிகை. அவரைப் பற்றியும் வனிதா பேசியுள்ளார். அதனால் வனிதா விஜயகுமார் நிச்சயம் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று கூறியுள்ளார்.

Contact Us