விடுதலைப் புலிகளின் அடையாளத்துடன் நைக் முத்திரை காலணிகள் – வெளிவிவகார அமைச்சு கூறியுள்ள விடயம்

 

தமிழீழ விடுதலைப் புலிகளின் அடையாளத்துடன் சித்தரிக்கப்பட்ட NIKE (நைக்) முத்திரை காலணிகள், தம்மால் தயாரிக்கப்படவில்லை என NIKE நிறுவனம் தெரிவித்துள்ளதாக மேற்கோள்காட்டி இலங்கையின் வெளியுறவு அமைச்சு அறிவிப்பொன்றை வெளியிட்டுள்ளது.

இது தொடர்பான காணொளி ஒன்று சமூக ஊடகங்களில் பதிவிடப்பட்டுள்ளமை தொடர்பில் இலங்கையின் வெளியுறவு அமைச்சின் கவனத்துக்கு கொண்டு வரப்பட்டுள்ளது.

இதனையடுத்து NIKE Inc. நிறுவனத்துடன் தொடர்பு கொண்ட போது, அந்த நிறுவனம், குறித்த உற்பத்தி, தம்மால் தயாரிக்கப்படவில்லை என்று அறிவித்துள்ளதாக இலங்கையின் வெளியுறவு அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

உறுதிப்படுத்தியது. அத்துடன் தமது புலமைச் சொத்துக்களின் துஷ்பிரயோகம் குறித்து விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு, நிறுவனத்தின் நடைமுறைக்கு ஏற்ப பொருத்தமான சட்ட அமுலாக்கம் நடைமுறைப்படுத்தப்படும் என NIKE, Inc. அறிவித்துள்ளதாக வெளியுறவு அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

Contact Us