கள்ளக் காதலி விவகாரம்- மூட்டை முடிச்சோடு மனைவி வீட்டை விட்டு வெளியேறிய மட் ஹனக் !

பிரித்தானிய சுகாதார துறை அமைச்சராக பெரும் பதவி வகித்து வந்தவர் மட் ஹனக். தென்னை மரத்தில் இருந்து விழுந்தவை மாடு ஏறி மிதித்த கதையாக, அவரது மனைவியும் அவரை வீட்டை விட்டு துரத்தி விட்டார். அவர் பதவியில் இருந்த கால கட்டத்தில், தனது அலுவலகத்தில் வேலை பார்த்த ஜின்னா என்ற பெண்ணை கள்ளக்காதலியாக வைத்திருந்தார். இதனை சன் பத்திரிகை எப்படியோ வீடியோ எடுத்து வெளியிட, அவரது பதவி பறிபோனது. இதனை அடுத்து இன்று அவர் தனது வீட்டில் இருந்தும் மூட்டை முடிச்சுகளோடு வெளியேறி விட்டார். அவரது மனைவி…

அவரை வீட்டை விட்டு துரத்தி விட்டதாக செய்திகள் வெளியாகியுள்ளது. இதனை அடுத்து அவர் எங்கே செல்ல உள்ளார் என்பது எவருக்கும் தெரியவில்லை. அடுத்த பிரித்தானிய பிரதமர் ஆகும் வாய்ப்புகள் அதிகம் இருந்த, அமைச்சரின் இன்றைய நிலை மிகவும் கவலைக் கிடமாக உள்ளது. எல்லாம் கள்ளக் காதல் செய்யும் வேலை தான். வீட்டில் கிளி மாதிரி ஒரு பெண்டாட்டி இருக்க, …. என்ற பழமொழி தான் நினைவுக்கு வருகிறது.

Contact Us