அமெரிக்காவில் பெண் ஒருவர் சாலையில் தலை துண்டித்து கொடூரமாக கொலை

 

 

அமெரிக்காவில் பெண் ஒருவர் சாலையில் தலை துண்டித்து கொல்லப்பட்டு கிடந்த சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர் ஒருவரை பொலிசார் கைது செய்துள்ளனர். இக்கொடூர சம்பவம் Minnesota, Shakopee பகுதியிலே நடந்துள்ளது. புதன்கிழமை மதியம் 2:30 மணிக்கு Shakopee-வில் சாலை ஓரத்தில் உள்ள நடைபாதையில் பெண் ஒருவர் தலை துண்டித்து கத்தியால் சரமாரியாக குத்தி கொல்லப்பட்டு கிடப்பதை பார்த்த அப்பகுதி வசிகள் பொலிஸாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.

சம்பவயிடத்திற்கு விரைந்த பொலிஸார் உடலை கைப்பற்றி விசாரணையை நடத்தியதில் , கொல்லப்பட்ட பெண் 55 வயதான America Mafalda Thayer என கண்டுபிடித்துள்ளனர்.

கியூபாவில் இருந்து புலம்பெயர்ந்த Thayer, உள்ளூர் கடையில் வேலை செய்துவந்துள்ளார். கடையில் உள்ள ஊழியர்களிடம் பொலிசார் விசாரணை மேற்கொண்ட போது, Thayer, 42 வயதான Alexis Saborit நபருடன் பழகி வந்தது தெரியவந்துள்ளது.

இந்நிலையில், Thayer கொலை தொடர்பில் Alexis Saborit கைது செய்த பொலிசார், அவரிடம் தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

Contact Us