தலை தெறிக்க ஓடும் அமெரிக்கா- தொடர்ந்து தாக்கும் தலிபான்கள்- என்ன செய்வது என்று திண்டாட்டம் !

ஆக்பானிஸ்தானில் இருந்து அமெரிக்க மற்றும் நேட்டோ துருப்புகள் வெளியேறி வருகிறது. இன் நிலையில் அங்கே மிகவும் சக்திவாய்ந்த இயக்கமாக தலிபான்கள் உருப்பெற்றுள்ளார்கள். அவர்கள் தொடர்ந்தும் அமெரிக்க நிலைகள் மீது கடும் தாக்குதலை நடத்தி வருவதோடு. ஆக்பானிஸ்தான் அரசு மீதும் தாக்குதலை தொடுத்துள்ளார்கள். இதனால் என்ன செய்வது என்று தெரியாமல் அமெரிக்க படைகள் திண்டாடி வருகிறது. இது நாள் வரை இவர்கள் எங்கே இருந்தார்கள், எப்படி திடீரென ஒன்று சேர்ந்தார்கள் ? பெரும் பலம்மிக்க சக்தியாக எப்படி உருப்பெற்றார்கள் என்பது தெரியவில்லை. இன் நிலையில்…

ஆப்கானிஸ்தானின் கந்தஹார் விமான நிலையம் மீது அடுத்தடுத்து மூன்று ராக்கெட்டுகள் வீசப்பட்டு தாக்குதல் நடத்தப்பட்டதால், அனைத்து விமானங்களும் ரத்து செய்யப்பட்டது. செய்தி நிறுவனம் AFP இந்த சம்பவம் குறித்து தகவல் அளித்துள்ளது. ஆப்கானிஸ்தான் (Afghanistan) கந்தஹார் விமான நிலையத்தில் மூன்று ராக்கெட்டுகள் வீசப்பட்டன என்றும் அவற்றில் இரண்டு ரன்வேயில் மோதியதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதன் பின்னர் விமான நிலையத்தின் அனைத்து விமானங்களும் ரத்து செய்யப்பட்டன.

இதற்கிடையே, காபூலில் உள்ள சிவில் விமான போக்குவரத்து ஆணையத்தின் அதிகாரி ஒருவர் ராக்கெட் தாக்குதலை உறுதி செய்துள்ளார். தலிபான்கள் பல வாரங்களாக கந்தஹாரின் புறநகர்ப் பகுதிகளில் தாக்குதல்களைத் தொடங்கினர், பயங்கரவாதிகள் மாகாண தலைநகரைக் கைப்பற்றும் நிலையில் இருப்பதாக அச்சத்தை ஏற்படுத்தினர். சனிக்கிழமை இரவு நடந்த இந்த தாக்குதலில் எந்த உயிர் சேதமும் ஏற்படவில்லை. தாக்குதலுக்கு பிறகு அனைத்து விமானங்களும் ரத்து செய்யப்பட்டுள்ளன. தாக்குதலின் பின்னணியில் தலிபான்கள் இருப்பதாக அதாரம் உள்ளதாக கூறப்படுகிறது.

Contact Us