முழுஊரடங்கு? – தமிழக மக்களுக்கு முதல்வர் ஸ்டாலின் கடும் உத்தரவு…!!!

 

தமிழகத்தில் தொடர்ச்சியாக அமல்படுத்தப்பட்டு வந்த ஊரடங்கு காரணமாக பாதிப்பு எண்ணிக்கை குறைந்து வந்ததனால் ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்பட்ட நிலையில், தற்போது சென்னை உள்ளிட்ட சில இடங்களில் பாதிப்பு மெல்ல மெல்ல உயர்ந்து வருகிறது. இதனால் கூடுதல் தளர்வுகளின்றி மேலும் ஒருவாரம் ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் ஊரடங்கு அமலில் உள்ளதால் அதிகளவு மக்கள் கூடினால் தொற்று பரவும் ஆபத்து ஏற்படும் என்பதால் மக்கள் அதிகம் கூடும் இடங்களில் கடைகளை திறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் மீண்டும் ஊரடங்கு என்ற சூழலுக்கு அரசை நிர்ப்பந்தித்து விடாதீர்கள் என்று கடுமையாகவே சொல்கிறேன் என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். கூட்டம் கூடுவதால் கொரோனா பரவலுக்கு மக்களே காரணமாகி விடக்கூடாது. கொரோனா 3வது அலை வந்தாலும் அதை எதிர்கொள்ள மருத்துவ கட்டமைப்போடு அரசு தயாராக உள்ளது. மக்கள் தொகை அதிகம் இருந்தாலும் கட்டுப்படுத்தும் பொறுப்பு அரசுக்கு உள்ளது என்று தெரிவித்துள்ளார்.

Contact Us