மனிதர்களை பாதிக்கும் விதத்தில் கொரோனா மாற்றியமைக்கப்பட்டது ; வுகான் ஆய்வுகூட விஞ்ஞானிகள் மீது குற்றச்சாட்டு

 

கொவிட் 19 பெருந்தொற்று சீனாவின் வுகான் ஆய்வு கூடத்திலிருந்தே பரவியது என அமெரிக்காவின் குடியரசு கட்சி தனது அறிக்கையொன்றில் தெரிவித்துள்ளது. அத்துடன் பெருமளவு ஆதாரங்கள் இதனை நிருபித்துள்ளதாகவும் குடியரசுக்கட்சி இதனை தெரிவித்துள்ளது. வுகான் ஆய்வுகூடத்தின் விஞ்ஞானிகள் அமெரிக்க நிபுணர்களினதும் சீன மற்றும் அமெரிக்க நிதியுதவி ஆகியவற்றின் உதவியுடனும் மனிதர்களை பாதிக்கும் விதத்தில் கொரோனா வைரசினை மாற்றியமைக்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டதாகவும் அமெரிக்க குடியரசுக்கட்சி தெரிவித்துள்ளது.

இந்த நடவடிக்கைகள் மறைக்கப்படக்கூடியவை எனவும் குடியரசுக்கட்சி தெரிவித்துள்ளது. அமெரிக்க சனப்பிரதிநிதிகள் சபையின் வெளிவிவகார குழுவில் இடம்பெற்றுள்ள குடியரசுகட்சியின் பிரதிநிதி மைக்மக்கோல் இந்த அறிக்கையை வெளியிட்டுள்ளார்.

கொரோனா வைரஸ் வுகானின் சந்தையிலிருந்து தோற்றம் பெற்றது என தெரிவிக்கப்படுவதை நாங்கள் முற்றாக நிருபிக்கவேண்டிய தருணம் இதுவென நாங்கள் கருதுகின்றோம் எனவும் குடியரசுக்கட்சியின் அறிக்கை தெரிவித்துள்ளது.

மேலும் செப்டம்பர் 12ம் திகதிக்கு முன்னர் வுகானின் ஆய்வுகூடத்திலிருந்து கொரோனா வைரஸ் கசிந்ததாக தாங்கள் கருதுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

Contact Us