ஆவா குழுவின் திருவிளையாடலை அறிந்து சுற்றிவளைத்த பொலிசார்!! 13 காவாலிகள் கைதானது எப்படி??

 

கிளிநொச்சி முழங்காவில் பகுதியில் ஆவா குழுவின் இரகசிய குறியீட்டுடனான கேக்கை,வாளால் வெட்டி, பிறந்தநாள் கொண்டாடிய 13 இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். கைதானவர்கள் அனைவரும் தென்மராட்சி, கொடிகாமம் மற்றும் அதை அண்டிய பகுதிகளை சேர்ந்தவர்கள். அவர்களை விளக்கமறியலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டது.

முழங்காவில் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட, பொது இடமொன்றில் இளைஞர்கள் குழுவொன்று கொண்டாட்டத்தில் ஈடுபடுவதாக பொலிசாருக்கு கிடைத்த தகவலையடுத்து அங்கு சென்றனர். இதன்போது, சுமார் 5 அடி நீளமாக கேக்கை வாளால் வெட்டி பிறந்தநாள் கொண்டாட்டத்தில் இளைஞர்கள் ஈடுபட்டது தெரிய வந்தது.

அவர்கள் அனைவரும் முழங்காவில் பொலிஸ் நிலையத்திற்கு கொண்டு செல்லப்பட்டு விசாரணைக்குட்படுத்தப்பட்டனர்.

Contact Us