ரிஷாத் பதியுதீன் இல்லத்தில் தீவிர ஆய்வு! ஹிசாலினி தொடர்பில் தொடரும் மர்மம்

நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாத் பதியுதீனின் இல்லம் இன்று அரச பகுப்பாய்வாளர் திணைக்களம் மற்றும் குற்றவியல் அதிகாரிகளால் ஆய்வு செய்யப்பட்டது. 16 அகவை சிறுமியின் மரணம் தொடர்பான விசாரணையின் ஒரு கட்டமாகவே இந்த ஆய்வும் நடத்தப்பட்டுள்ளது.

அரச பகுப்பாய்வு ஆய்வாளர் திணைக்களத்தைச் சேர்ந்த அதிகாரிகள் இன்று காலையிலும் மாலையிலும் பதியுதீனின் இல்லத்தில் ஆய்வுகளை மேற்கொண்டனர்.

மேலும், இலங்கை காவல்துறையின் சிறுவர் மற்றும் பெண்கள் பணியகத்தின் அதிகாரிகளும் இன்று பதியுதீனின் வீட்டிற்குச் சென்று வாக்குமூலங்களைப் பதிவு செய்ததாகத் தெரிவிக்கப்படுகிறது.

Contact Us