FlashNews: 3-வது அலை: மீண்டும் தமிழகத்தில்…. அரசு அறிவிப்பு….!!

 

தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த கடந்த மே 10ஆம் தேதி முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அதன் பலனாக தமிழகத்தில் கொரோனா பாதிப்பு கணிசமாக குறைந்து கொண்டே வந்தது. அதனால் ஊரடங்கு தளர்வு களை அரசு படிப்படியாக அறிவித்து வருகிறது. ஆனால் கடந்த ஓரிரு நாட்களாக தமிழகத்தில் மீண்டும் கொரோனா பாதிப்பு அதிகரி க்கத் தொடங்கி உள்ளதால், புதிய தளர்வுகள் எதுவும் இல்லாமல் ஆகஸ்ட் 9ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து பல்வேறு மாவட்டங்களில் ஊரடங்கு கட்டுப்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது.

இந்நிலையில் சென்னையில் கொரோனா மூன்றாவது அலை பரவாமல் தடுக்க காவல் ஆணையர் அலுவலகத்தில் வார் ரூம் உருவாக்கப்பட்டுள்ளது. துணை ஆணையர் பாலசுப்பிரமணியம் தலைமையில் 30 காவலர்கள் இந்த வார் ரூமில் செயல்படத் தொடங்கியுள்ளனர். மேலும் புதிதாக நோய் தொற்று கண்டறியப்படும் இடங்களை கட்டுப்பாட்டு பகுதிகளாக மாற்றவும், அங்கு தீவிரமாக கண்காணிக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

Contact Us