ரிசாட் வீட்டு ஹிஷாலினி அறை சுவரில் ‘என் சாவுக்கு காரணம்…’ சிக்கிய முக்கிய சாட்சி!

 

முன்னாள் அமைச்சரும், பாராளுமன்ற உறுப்பினருமான ரிசாட் பதியுதீன் வீட்டில் பணிப்பெண்ணாக கடமையாற்றிய நிலையில் தீக்காயங்களுக்கு உள்ளாகி உயிரிழந்த டயகம சிறுமி ஹிஷாலினி மரணம் தொடர்பில் முக்கிய சாட்சியம் கிடைத்திருப்பதாக பொலிஸ் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீனின் பொரளை பகுதியில் உள்ள வீடு மீண்டும் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளது. பொலிஸ் சிறுவர் மற்றும் மகளிர் பிரிவின் குழவினரால் இந்த பரிசோதனை முன்னெடுக்கப்பட்டுள்ளது. ஹிஷாலினியின் மரணம் குறித்த விசாரணைகளுக்கான மேலதிக தகவல்களை பெற்றுக் கொள்ளும் நோக்கில் இந்த பரிசோதனை முன்னெடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை, சிறுமி ஹிஷாலினி தங்கியிருந்த அறையின் சுவரில் தமிழில் அர்த்தப்படும் வகையில் எழுதப்பட்ட ஆங்கில மொழி எழுத்துக்கள் (தங்கிலிஷ்) கண்டு பிடிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் பேச்சாளர் சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.

குறித்த அறையை பரிசோதனைக்கு உட்படுத்தியபோது அவற்றில் தமிழ் மொழியில் அர்த்தங்கள் வெளிப்படுத்தப்படும் வகையில் ஆங்கில எழுத்துகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். இதில் ‘என் சாவுக்கு காரணம்’ என தங்கிலிஷில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த எழுத்துக்கள் இரசாயன பகுப்பாய்வு நிபுணர்களால் பரிசோதிக்கப்படுவதாக பொலிஸ் பேச்சாளர் மேலும் தெரிவித்தார்.

Contact Us