மகனுடன் படப்பிடிப்பிற்கு சென்ற விக்ரம்.. நூலிழையில் உயிர் தப்பிய அதிர்ச்சி சம்பவம்..!!

 

நடிகர் விக்ரமும் அவரின் மகனான நடிகர் துருவ் விக்ரமும் படப்பிடிப்பிற்காக வெளிநாட்டிற்கு சென்ற போது, நடுவானில் விமானத்தில் கோளாறு ஏற்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நடிகர் விக்ரம் நடிக்கும் 60-வது திரைப்படத்தில் அவரின் மகன் துருவ் விக்ரமும் நடிக்கிறார். கொரோனா கட்டுப்பாடுகளினால், அனைத்து படப்பிடிப்பும் நிறுத்தப்பட்டிருந்தது. இந்நிலையில் அரசாங்கம் படப்பிடிப்பு நடத்த தற்போது, அனுமதி அளித்திருப்பதால், மீண்டும் படப்பிடிப்பு தொடங்கியுள்ளது. எனவே படக்குழுவினர் வெளிநாடுகளில் எடுக்கவுள்ள காட்சிகளை முதலில் படமாக்க முடிவு செய்துள்ளனர்.

அதன்படி, படக்குழுவினர் டார்ஜிலிங்கிற்கு செல்வதற்கு தயாராக இருந்தனர். எனவே நடிகர் விக்ரம் மற்றும் துருவ் விக்ரம் உள்பட சுமார் 60 நபர்கள் விமானத்தில் பயணித்துள்ளனர். இந்நிலையில் புறப்பட்டுச் சென்ற சிறிது நேரத்தில், நடுவானத்தில், விமானத்தில் கோளாறு ஏற்பட்டது.
இதனால், அனைவரும் பதற்றம் அடைந்தனர். எனினும், சுமார் 45 நிமிடங்களில், விமானத்தை பாதுகாப்பாக சென்னை விமான நிலையத்தில் தரையிறக்கியுள்ளனர். அதன் பின்பு அடுத்த நாள் படக்குழுவினர் டார்ஜிலிங் சென்றிருக்கிறார்கள்.

Contact Us