வலிமை படத்தில் இதுதான் தல அஜித் பெயரா..!

 

வலிமை படத்தில் காவல்துறை அதிகாரி கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் தல அஜித்தின் பெயர் குறித்த தகவல் தற்போது வெளியாகியுள்ளது. இயக்குனர் எச்.வினோத் இயக்கத்தில் தல அஜித் நடிப்பில் உருவாகியுள்ள “வலிமை” படம் ரசிகர்கள் மத்தியில் மாபெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்தப் படத்தினுடைய பர்ஸ்ட் லுக் போஸ்டர்கள் நீண்ட நாட்களுக்கு பிறகு வெளியாகி சமூக வலைதளங்களில் வைரலாகி வந்தது. அதனை தொடர்ந்து நேற்று வலிமை படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கில் எந்தவித அறிவிப்பும் இன்றி வெளியானது.

அதன் பிறகு வலிமை படத்தின் “நாங்க வேற மாதிரி” பாடல் இரவு 10.45 மணிக்கு வெளியாகி சமூக வலைதளங்களில் ட்ரெண்டிங்-ஆகி வருகிறது. இந்த நிலையில் காவல்துறை அதிகாரியாக வலிமை படத்தில் நடித்திருக்கும் தல அஜித்தின் பெயர் குறித்த தகவலும் தற்போது வெளியாகியுள்ளது. வலிமை திரைப்படத்தில் காவல்துறை அதிகாரியாக நடித்திருக்கும் தல அஜித்தின் பெயர் “அர்ஜுன் குமார்” என்ற தகவலும் வெளியாகியுள்ளது.

Contact Us