திருமண மேடையில் நடிகையை கட்டிப்பிடித்த சினேகன்

பாடலாசிரியரான சினேகன் கடந்த சில தினங்களுக்கு முன்பு திருமணம் செய்து கொண்ட நிலையில், அவரை விடாமல் ரசிகர்கள் துரத்தி வருகின்றனர். நடிகை கன்னிகாவை திருமணம் செய்த இவரது ஒவ்வொரு செயல்களையும் ரசிகர்கள் புகைப்படமாக வெளியிட்டு பரப்பி வருகின்றனர்.

கடந்த சில தினங்களுக்கு முன்பு, சினேகனின் டைனமிக் காணொளியினை வெளியிட்டு, விளாசி வந்த நிலையில், நேற்றைய தினத்தில் படப்பிடிப்பு ஒன்றில் கலந்து கொண்ட புகைப்படமும், மனைவியுடன் கோவிலுக்குச் சென்று வந்த புகைப்படமும் வெளியானது.

இந்நிலையில் சினேகன் தனது திருமணத்தன்று, நடிகையும், பிக்பாஸ் போட்டியாளருமான சுஜா வருணியுடன் எடுத்த புகைப்படத்தினை ரசிகர்கள் தற்போது வைரலாக்கி வருகின்றனர்.

பிக்பாஸ் வீட்டிற்குள் இருக்கும் போது, கட்டிப்பிடி வைத்தியம் என்ற முறையில் சக போட்டியாளர்களை கட்டிப்பிடித்த சினேகன் திருமணத்தன்றும் அதனை விடவில்லையா? என்று கேள்வி எழுப்பி கலாய்த்து வருகின்றனர்.

 

 

Contact Us