இஸ்ரேல் கப்பலை கடத்திய ஈரான் -அமெரிக்க- பிரிட்டன் போர் கப்பல் விரைந்த கடல் பகுதி- X-ரே ரிப்போட் !

 

கடந்த 2 தினங்களுக்கு முன்னர், காதும் காதும் வைத்தது போல ஒரு சம்பவம் நடந்து உள்ளது. ஆனால் உலக அளவில் எந்த ஊடகங்களிலும் இந்த சம்பவம் பெரிதாக வெளியாகவில்லை. இஸ்ரேல் நாட்டின் எண்ணைக் கப்பல் ஒன்று, ஓமான் வளைகுடாவில் இரவு நேரத்தில் இஸ்ரேல் நோக்கி பயணித்துக் கொண்டு இருந்தது.  சுமார் 11 மணி அளவில், 3 சிறிய ரக தாக்குதல் படகுகள் குறித்த கப்பலை நோக்கி விரைந்து வந்தது. அவற்றில் வெள்ளை மற்றும் சிவப்பு நிறத்திலான கொடிகள் பறக்க விடப்பட்டிருந்ததால், ஒமான் நாட்டு கடல் படை என்று,  இஸ்ரேல் மாலுமிகள் நினைத்தார்கள். ஆஸ்போ பிரின்சஸ் (Asphalt Princess) என்ற அந்த எண்ணைக் கப்பலின், பின் புறமாக கயிற்றைப் போட்டு, ஆயுதம் தாங்கிய 7 பேர் தாவி ஏறி விட்டார்கள். அவர்கள் நேரடியாக மாலுமிகள் இருக்கும் அறைக்குச் சென்று துப்பாக்கி முனையில்…. கப்பலை ஈரான் நாடு நோக்கிச் செல்லுமாறு கட்டளை பிறப்பித்தார்கள். ( Source: CIA : How the Iran tanker hijacking unfolded)

ஆனால் இஸ்ரேல் மாலுமிகள் 3 அதிவேக தாக்குதல் படகுகள், தமது கப்பலை நெருங்கும் போதே, இயந்திர கோளாறு ஒன்றை ஏற்படுத்தி கப்பல் பழுது பட்டு நிற்பது போல ஒரு சூழ் நிலையை ஏற்படுத்தி விட்டார்கள். (இஸ்ரேல் நபர்களுக்கு புத்தி அதிகம் என்பது யாவரும் அறிந்த விடையம்) இன் நிலையில் கப்பலுக்குள் புகுந்த ஈரான் நாட்டு சீல படையினர். கப்பலை ஈரான் நோக்கி நகர்த்த முற்பட்டு தோற்றுப் போனார்கள். உண்மையில் கப்பலில் கோளாறு உள்ளதாக அவர்கள் நம்பி விட்டார்கள், முட்டாள் தனமாக.  இன் நிலையில் லண்டனில் உள்ள சர்வதேச கப்பல்களின் பாதுகாப்பை கவனிக்கும் அமைப்புக்குUKMTO.. (United Kingdom Maritime Trade Operations), ரகசிய தகவல் கிடைத்தது. அது ஓமான் நாட்டு படையினரால் வழங்கப்பட்ட தகவல் ஆகும். இதனை அடுத்து…

பிரிட்டன் அமெரிக்காவை உஷார் படுத்தியது. இதனால் அமெரிக்க கடல் படை கப்பல் ஒன்று குறித்த இடம் நோக்கி விரைந்து செல்ல ஆரம்பித்தது. தமது கடத்தல் திட்டம் தோல்வியடைந்ததை உணர்ந்து கொண்ட ஈரான் நாட்டு சீல் படையினர். உடனடியாக தமது படகுகளில் ஏறி தப்பித்து விட்டார்கள். பிரித்தானியா லண்டனில் உள்ள ஈரான் நாட்டு தூதுவரை அழைத்து என்ன நடந்தது என்று கேட்டபோது. எங்களுக்கு எதுவும் தெரியாது. தாக்குதல் படகில் இருந்தது ஈரான் படைகள் அல்ல என்று, கூறி நழுவி விட்டது ஈரான். இதேவேளை இஸ்ரேல் இது தொடர்பாக ஆராய்ந்து வருகிறது. அது போக அமெரிக்கா தற்போது தனது கடல் படை கப்பல் ஒன்றை,  ஒமான் நாட்டு வளைகுடா பகுதியில் நிறுத்த திட்டம் தீட்டி வருகிறது.

ஈரான் நாட்டு அணு சக்த்தி விஞ்ஞானி சென்ற காரை, ஈரான் நாட்டில் வைத்தே வழி மறித்து அவரை சுட்டுக் கொன்றது ஒரு கூலிப் படை. அது வேறு யாரும் அல்ல இஸ்ரேலின் மொசாட் உளவுப் படை தான். அன்று தொட்டு இன்றுவரை, இஸ்ரேலுக்கு எப்படி என்றாலும் தகுந்த பதிலடி ஒன்றைக் கொடுக்கவேண்டும் என்று ஈரான் துடித்துக் கொண்டு இருக்கிறது. அதன் ஒரு அங்கம் தான் இந்த கடத்தல் திட்டம். ஆனால் துரதிஷ்ட வசமாக அது நடக்கவில்லை. ஓசை படாமல் 4 நாடுகளும் இந்த நிகழ்வை மூடி மறைத்து விட்டார்கள். அமெரிக்க உளவுத்துறையின், சில உரையாடலை மட்டும் ஆங்கில ஊடகம் ஒன்று செய்தியாக வெளியிட்டு. இந்த தகவலை வெளியிட்டுள்ளார்கள். அதிர்வு இணைய புலனாய்வு செய்தியாளர் உங்களுக்காக இந்த பிரத்தியேக செய்தியை மொழிபெயர்த்து வழங்கியுள்ளார்.
அதிர்வுக்காக
கண்ணன்:

 

Contact Us