இந்து கோவிலை வெறித்தனமாக அடித்து நொறுக்கிய கும்பல்: தொடரும் அட்டூழியம்

 

பாகிஸ்தானில் இந்து மதத்தை சேர்ந்தவர்களையும் அவர்கள் வழிபாடு நடத்தும் கோவில்களையும் குறிவைத்து தாக்குதல் நடத்தும் சம்பவங்கள் தொடர்ந்து அரங்கேறி வருகின்றன. பாகிஸ்தானில் சிறுபான்மையாக வாழ்ந்துவரும் இந்துக்கள், சீக்கியர்கள் உள்ளிட்டோருக்கு எதிரான வன்முறைகளும், குற்றங்களும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

குறிப்பாக, இந்து மதத்தை சேர்ந்தவர்களையும் அவர்கள் வழிபாடு நடத்தும் கோவில்களையும் குறிவைத்து தாக்குதல் நடத்தும் சம்பவங்கள் அரங்கேறி வருகின்றன. இந்த சம்பவங்களை அந்நாட்டில் செயல்பட்டு வரும் பல்வேறு அரசியல் கட்சிகளும், மத அமைப்புகளும் ஆதரிக்கின்றன.

இந்நிலையில், பஞ்சாப் மாகாணம் ரகிம் யார் கான் மாவட்டம், போங் நகரில் உள்ள புகழ்பெற்ற விநாயகர் கோவில் அடித்து நொறுக்கப்பட்டுள்ளது. கோவிலை வெறித்தனமாக தாக்கிய கும்பல், கோவிலுக்குள் உள்ள சாமி சிலைகளையும் சேதப்படுத்தினர்.

தாக்குதல் நடத்தும்போது எடுக்கப்பட்ட வீடியோக்களை இந்து சமுதாய தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான ரமேஷ் வங்வானி டுவிட்டரில் பதிவிட்டுள்ளார். இந்த விஷயத்தில் தலைமை நீதிபதி தலையிட்டு, குற்றவாளிகளுக்கு கடும் தண்டனை வழங்க வேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளார்.

Contact Us