யாழில் இன்று அதிரடியாக சீல் வைக்கப்பட்ட இரு ஆலயங்கள்!

 

யாழ்ப்பாணம் பருத்தித்துறையிலுள்ள சுப்பர்மடம் முனியப்பர் ஆலயம், மற்றும் சிவன் ஆலயம் என்பன தனிமைப்படுத்தல் சட்டத்தின் கீழ் சீல் வைக்கப்பட்டு வழிபாடுகள் அனைத்தும் 14 நாட்களுக்கு இடைநிறுத்தப்பட்டுள்ளன. இன்றையதினம் பருத்தித்துறை முனியப்பர் ஆலயத்தில் இடம்பெற்ற இரதோற்சவத்தில் கலந்துகொண்ட அதிகளவான பக்தர்கள், சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றாதமை தொடர்பாக சுகாதார மருத்துவ அதிகாரிகளுக்கு ஒளிப்படத்துடன் முறைப்பாடு வழங்கப்பட்டுள்ளது.

அந்த முறைப்பாட்டுக்கமைய அப்பகுதிக்குச் சென்று விசாரணையை மேற்கொண்ட பொதுச் சுகாதாரப் பரிசோதகர்கள் மற்றும் பொலிஸார், சுகாதார நடைமுறைகளை பேண தவறியமைக்காக, ஆலயத்தில் எதிர்வரும் 21ஆம் திகதி வரை வழிபாடுகளை நிறுத்தி மூடுவதற்கு அறிவித்தல் ஒட்டப்பட்டது.

இதேவேளை பருத்தித்துறை சிவன் ஆலயத்திலும் சுகாதார நடைமுறைகளை மீறி,வெளி வீதியில் திருவிழாவை நடத்தியமைக்காக ஆலய வழிபாடுகளை எதிர்வரும் 21ஆம் திகதிவரை இடைநிறுத்த அறிவித்தல் வழங்கப்பட்டுள்ளது.

மேலும் குறித்த ஆலய நிர்வாகிகளும் வீடுகளிலேயே சுயதனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Contact Us