“தடுப்பூசி செலுத்திய இலங்கை மக்களுக்கு இது தேவையில்லை!”.. வெளியான அறிவிப்பு..!!

 

இலங்கையை சேர்ந்த மக்கள், முழுமையாக தடுப்பூசி செலுத்தியிருந்தால், அவர்களின் குடியுரிமை கடவுசீட்டை வைத்து இலங்கைக்கு வரலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் அவர்கள் இரண்டு தவணை தடுப்பூசிகளும் எடுத்திருக்க வேண்டும் என்று CAASL தெரிவித்துள்ளது.

கடந்த 2 வாரங்களில் இந்தியா சென்ற பயணிகள், இலங்கை திரும்புவதற்கு வெளியுறவு அமைச்சகத்திடமிருந்து முன்பதிவு செய்ய வேண்டிய தேவையில்லை.

2 வயதிலிருந்து 18 வயது வரை உள்ள தடுப்பூசி செலுத்தாத குழந்தைகள் இலங்கைக்கு வந்த பின் சுகாதார அமைச்சகம் அங்கீகரித்த தனியார் துறையிலோ அல்லது அரசு துறை ஆய்வகத்திலோ ஏழாவது நாளுக்கான கொரோனா PCR பரிசோதனையை கண்டிப்பாக மேற்கொள்ள வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Contact Us