தினமும் சுடுகாட்டிற்குச் சென்று அழுத இளைஞரை மனைவியை எரித்த இடத்திலேயே எரித்த உறவினர்கள்

 

தினமும் சுடுகாட்டிற்குச் சென்று அழுத இளைஞர் மனைவியை எரித்த இடத்திலேயே தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டிருக்கிறார். அவரை மனைவியை தகனம் செய்த இடத்திலேயே தகனம் செய்துள்ளனர். இந்த சோக சம்பவம் சத்தீஸ்கர் மாநிலம் பலோட் கிராமத்தில் நடந்து இருக்கிறது.

பலோட் கிராமத்தில் மனிஷ் நேதம் என்ற இளைஞர் காவல் துறையில் பணிபுரிந்து வந்துள்ளார். அவர் தனது சம்பாத்தியத்தில் பார்த்து பார்த்து ஒரு கனவு இல்லத்தை கட்டியிருக்கிறார். புது வீடு கட்டிய பின்னர் தான் திருமணம் என்ற இலட்சியத்தில் இருந்தவர், தனது லட்சியத்தின்படியே புது வீட்டை கட்டிறிருக்கிறார். அடுத்ததாக பெண் பார்த்து லதா என்பவரை கடந்த 2 மாதங்களுக்கு முன்பு திருமணம் செய்திருக்கிறார்.

புது வீடு புது மனைவி என்று சந்தோசமாக போய்க்கொண்டிருந்திருக்கிறது மனிஷ் நேதம் வாழ்க்கை. திருமணம் நடந்து சில நாட்கள் தான் என்றாலும் லதா -மனிஷ் நேதம் தம்பதி மிகவும் அன்பாக இருந்திருக்கிறார்கள்.

திருமணம் நடந்த 13வது நாளில் வீட்டில் உள்ள டைல்ஸ் அறையில் வழுக்கி விழுந்ததில் தலையில் பலமாக அடிபட்டு இருக்கிறது. இதில் சிகிச்சை பலனின்றி லதா உயிரிழந்து விட்டார். லதாவின் இந்த திடீர் மரணத்தை தாங்கிக் கொள்ள முடியவில்லை மனிதனுக்கு இதனால் சுடுகாட்டில் லதாவை எரித்த இடத்தில் தினமும் சென்று அழுது கொண்டே இருந்திருக்கிறார். ஒருநாள் இரண்டு நாள் அல்ல, இப்படியே 17 நாட்கள் செய்திருக்கிறார்.

 

இந்நிலையில் திடீரென்று அப்படி சுடுகாட்டுக்கு சென்றவர் வீடு திரும்பவில்லை. மனைவியை நினைத்து அவர் அந்த இடத்திற்கு சென்று அழுது விட்டு எப்போதும் போல வீடு திரும்பி விடுவார் என்று நினைத்து உறவினர்கள் அவர் திரும்பாததால் பதற்றத்துடன் சுடுகாட்டிற்கு சென்றனர். அப்போது மனைவியை எரித்த இடத்தில் இருந்த மரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டு சடலமாக தொங்கிக் கொண்டிருந்திருக்கிறார்.

தற்கொலை செய்வதற்கு முன்பாக தனது சகோதரருக்கு வாட்ஸ் அப்பில் ஒரு மெசேஜ் அனுப்பி இருக்கிறார் மனிஷ் நேதம். அதில் லதாவை தன்னால் மறக்க முடியவில்லை என்றும், லதாவின் நினைவாகவே இருப்பதும் இருக்கிறது என்றும் பார்த்து பார்த்து கஷ்டப்பட்டு கட்டிய கனவு வீட்டை லதா இல்லாமல் தன்னால் வாழ முடியவில்லை. அதனால் தற்கொலை செய்து கொள்கிறேன் என்று குறிப்பிட்டிருக்கிறார்.

மனைவி இறந்த துக்கத்தால் லதா தகனம் செய்த அதே இடத்திலேயே வைத்து மனிஷ் நேதம் உடலையும் தகனம் செய்துள்ளனர்.

Contact Us