இனி சிம்பு தவறான பாதையில் போக மாட்டார்.. வக்காலத்து வாங்கும் பிரபல தயாரிப்பாளர்

 

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் சிம்பு. இவரது நடிப்பில் வெளியான படங்கள் அனைத்துமே நல்ல வரவேற்பைப் பெற்றன. அதனால் தொடர்ந்து பல இயக்குனர்களும் சிம்புவை வைத்து படங்களை இயக்கி வருகின்றனர்.

சிம்பு மாநாடு எனும் படத்தில் நடித்து முடித்துள்ளார். இப்படத்தை வெங்கட் பிரபு இயக்கியுள்ளார் சுரேஷ் காமாட்சி தயாரித்துள்ளார். இப்படத்தின் போது சிம்புவிற்கும் சுரேஷ் காமாட்சி இருக்கும் இடையே ஒரு சில மோதல் ஏற்பட்டுள்ளது. அப்போது சிம்புவின் குடும்பத்தினர் சிம்பு இனிமேல் சரியாக நடந்து கொள்வார் என கூறியுள்ளனர். அதன் பிறகு சுரேஷ் காமாட்சி இப்படத்தை தயாரிப்பதற்கு முன் வந்துள்ளார். இப்படத்தின் இறுதிகட்ட பணிகள் முடிவடைந்து விரைவில் திரையரங்கில் வெளியாக உள்ளன. ஆனால் சிம்பு அடுத்தடுத்த படங்களில் நடிப்பதற்கு பல சிக்கல்கள் ஏற்பட்டது.

சிம்பு சில ஆண்டுகளாகவே படப்பிடிப்பிற்கு சரியாக வருவதில்லை என தயாரிப்பாளர்கள் பலரும் குறை கூறினர். இதனால் தயாரிப்பாளர்கள் பலருக்கும் நஷ்டம் ஏற்பட்டதாகவும் கூறினர். அதன் பிறகு சிம்பு இதனை உணர்ந்து சரியான நேரத்திற்கு படப்பிடிப்பிற்கு வந்து படங்களில் நடித்து முடித்துக் கொடுத்தார்.

ஆனால் சிம்பு பிரபல தயாரிப்பாளர் தயாரிப்பில் ஒரு படத்தில் நடிப்பதற்காக ஒப்பந்தம் பெற்றுள்ளார் ஆனால் அதன் பிறகு இப்படத்தில் நடிக்க முடியாது என தெரிவித்ததை அடுத்து தயாரிப்பாளர் படத்தில் நடிப்பதற்கான வாங்கிய அட்வான்ஸ் மற்றும் அதற்கு தகுந்த வட்டியை கொடுக்க வேண்டும் என மைக்கேல் ராயப்பன் கூறினார்.

 

அதன் பிறகு சிம்பு ஒப்பந்தத்தில் அட்வான்ஸ் மட்டுமே கொடுக்கப்படும் அதற்கான வட்டி கொடுப்பதற்கான ஒப்பந்தம் இல்லை இதனால் பிரச்சினை சுமுகமாக முடிந்தது. சிம்புவின் அம்மா உஷா ராஜேந்தர் தன் மகன் இனிமேல் சரியான நேரத்திற்கு வந்து படப்பிடிப்பில் கலந்துகொண்டு படத்தின் எடுத்துக் கொடுப்பான். இனிமேல் அவர் எந்த தவறு செய்யமாட்டார்கள் தான் பொறுப்பு எனக் கூறியதை அடுத்து தற்போது தயாரிப்பாளர்கள் பலரும் சிம்புவை நடிக்க சம்மதித்துள்ளனர்.

மேலும் பிரபல தயாரிப்பாளர் கே ராஜன்.சிம்புவை இனிமேல் சரியான முறையில் நடந்து கொண்டால் படங்களில் நடிப்பார் அதற்கு சிம்பு ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும் எனக் கூறினார். சிம்பு நடிப்பதற்கு இருந்த பிரச்சனைகள் முழுவதும் முடிவடைந்து விட்டது. சிம்பு இனி வரும் படங்களில் நடிப்பார் என கூறினார்.

Contact Us