நயன்தாராவை 3 நாட்கள் காக்க வைத்து கெத்து காட்டிய பிரபல நடிகர்.. கடுப்பான லேடி சூப்பர் ஸ்டார்!

தமிழ் சினிமாவின் தற்போதைய நிலைமையில் மிகவும் பிசியான நடிகர் என்றால் அது விஜய் சேதுபதி மட்டும் தான். ஹீரோ, வில்லன் என வேறுபாடு பார்க்காமல் தன்னை தேடி வரும் அனைத்து படங்களுக்கும் ஓகே சொல்லி நடித்து வருகிறார். கைவசம் ஏராளமான படங்களை வைத்துள்ள விஜய் சேதுபதி இதற்கிடையில் மாஸ்டர் செஃப் நிகழ்ச்சியையும் தொகுத்து வழங்கி வருகிறார்.

விஜய் சேதுபதி ஒரே சமயத்தில் பல படங்களில் நடித்து வருவதால் கால்ஷீட் பிரச்சனையை அதிகமாக சந்தித்து வருகிறார். ஒன்று அல்லது இரண்டு படங்கள் என்றால் பரவாயில்லை ஒரே சமயத்தில் பத்துக்கும் மேற்பட்ட படங்களில் நடித்து வருவதால் தேதி ஒதுக்குவதில் பிரச்சனை ஏற்பட்டுள்ளது.

விஜய் சேதுபதி தற்போது இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் காத்துவாக்குல ரெண்டு காதல் என்ற படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் முன்னணி நடிகைகளான நயன்தாரா மற்றும் சமந்தா ஆகிய இருவரும் நாயகிகளாக நடித்து வருகின்றனர். இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

விஜய் சேதுபதி தற்போது 10க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து வருவதால், தன் தேதிகளை 5 நாள், 10 நாள் என பிரித்து பிரித்து இயக்குனர்களுக்கு வழங்கி வருகிறார். இந்நிலையில் சமீபத்தில் திண்டுக்கல்லில் நடந்த பொன்ராம் படத்தின் படப்பிடிப்பில் கலந்து கொண்டுள்ளார்.

அப்போது இயக்குனர் பொன்ராமோ கூடுதலாக மூன்று நாட்கள் கொடுத்தால் அங்கு நடக்கும் மொத்த படப்பிடிப்பையும் முடித்துவிடுவேன் எனக் கூறி விட்டாராம். எனவே விஜய் சேதுபதியும் சம்மதம் தெரிவித்து நடித்து கொடுத்துள்ளார்.

ஆனால் அந்த மூன்று நாட்கள் அவர் காத்து வாக்குல ரெண்டு காதல் படத்தின் படப்பிடிப்பில் கலந்துகொள்ள வேண்டிய நாட்களாம். இந்நிலையில் அந்த படப்பிடிப்புக்காக சென்னை வந்த நயன்தாரா தனது காதலரின் படம் என்பதால், 3 நாட்கள் பொறுமையாக இருந்து நடித்து கொடுத்துள்ளாராம்.

Contact Us