பிரிட்டன் பிரிட்டன் தான்: ஆப்கான் மக்களை ஏற்றிய பிரிட்டன் கார்கோ விமானம் அமெரிக்காவுக்கு செருப்படி !!!

 

நாதியற்று நிற்க்கும் ஆப்கான் மக்களை, அதுவும் அமெரிக்க ராணுவத்திற்கு பல உதவிகளை புரிந்த சில நூறு மக்கள் தாம் நிச்சயம் நாட்டை விட்டு வெளியேறவேண்டும் என்று கெஞ்சிக் கூத்தாடி வருகிறார்கள். அமெரிக்கா அவர்களை கை விட்டுச் சென்றுவிட்டது. ஆனால் பிரித்தானியா மீண்டும் ஒரு முறை தனது மனித நேயத்தை நிரூபித்துள்ளது. ஒரு சல்லியூட் கொடுக்க வேண்டும். ஆம் பிரித்தானிய கார்கோ விமானம் சுமார் 80 ஆப்கான் அகதிகளை( பொதுவாக சிறுவர்களை சிறுமிகளை ஏற்றியுள்ளது) என அதிர்வு இணையம் சற்று முன்னர் அறிகிறது.

பிரிட்டன் விமானப் படையின் விமானத்தில் ஆப்கான் மக்கள் கொண்டு வரப்பட்டது குறித்த வீடியோவை பிரிட்டன் பாதுகாப்புத் துறை வெளியிட்டுள்ளது. தூதரக பணியாளர்களுடன் சேர்த்து பிரிட்டன் ஆதரவு ஆப்கான் மக்களை விமானங்கள் மூலம் இங்கிலாந்து இராணுவம் மீட்டுள்ளது.

அதேநேரம் பிரிட்டன் மற்றும் நேட்டோ படைகள் மீண்டும் தாலிபான்களுக்கு எதிராக சண்டையிடப்போவதில்லை என பிரிட்டன் பாதுகாப்புத் துறை அமைச்சர் Ben Wallace தெரிவித்துள்ளார்.  முழு நாட்டையும் கைப்பற்றியுள்ள தலிபான்கள், விமான நிலையத்தை இன்று வரை தாக்கவில்லை. அது ஏன் என்று தெரியவில்லை. வெளிநாட்டவர்கள் வெளியேற அவர்கள் நேரம் கொடுத்திருப்பது தெரிகிறது…

Contact Us