காபூலில் இருந்த இலங்கையர்கள் எங்கு சென்றார்கள்..? மீதமுள்ளவர்களின் நிலை என்ன..? வெளியான தகவல்..!!

 

ஆப்கானிஸ்தான், தலிபான்கள் கட்டுப்பாட்டிற்கு சென்ற பின்பு மக்கள் பலரும் அங்கிருந்து வெளியேறி வருகிறார்கள். பல்வேறு நாடுகளும் தனி விமானத்தை அனுப்பி, தங்கள் நாட்டு மக்களை அங்கிருந்து அழைத்து செல்கிறது. எனினும், ஆப்கானிஸ்தானில் இருக்கும் இலங்கை மக்கள் தொடர்பில் எந்த தகவலும் வெளியாகவில்லை.

இந்நிலையில், இலங்கையை சேர்ந்த 8 நபர்கள் ஆப்கானிஸ்தானிலிருந்து வெளியேறியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் மூவர் பிரிட்டன் நாட்டிற்கு சென்றதாகவும், மீதமுள்ள 5 நபர்கள் கத்தாருக்கு சென்றதாகவும் வெளிவிவகார செயலாளரான, ஓய்வுபெற்ற பேராசிரியர் Jayantha Colombage தெரிவித்துள்ளார்.

மேலும், அவர் கூறுகையில், இலங்கை மக்கள் 60 பேர் ஆப்கானிஸ்தானில் உள்ளதாகவும், அவர்கள் பிற நாட்டு மக்களுடன் சேர்ந்து வெளியேற பல்வேறு நாடுகளிடமும் கோரிக்கை விடுக்கப்பட்டிருப்பதாகவும் தெரிவித்திருக்கிறார். முக்கியமாக, இந்தியா, அமெரிக்கா, பிரிட்டன் மற்றும் பாகிஸ்தான் போன்ற நாடுகளுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டிருக்கிறது. எனவே காபூலில் உள்ள இலங்கை மக்கள் பாதுகாப்பாக வெளியேற உரிய நடவடிக்கைகள் அனைத்தும் மேற்கொள்ளப்படும் என்றும் அவர் கூறியிருக்கிறார்.

Contact Us