‘கட்டாய திருமணம்’…. மோசமாகும் பெண்களின் நிலைமை…. அடிமைப்படுத்தும் தலீபான்கள்….!!

 

ஆப்கானிஸ்தானில் நேட்டோ படைகள் வெளியேறியதால் அங்கு தலீபான்களின் ஆதிக்கம் அதிகரித்து வந்தது. இந்த நிலையில் கடந்த ஞாயிறுகிழமை அன்று காபூலை கைப்பற்றிய தலீபான்கள் நாட்டின் முழு அதிகாரத்தையும் தங்கள் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்துள்ளனர். இதனால் ஆப்கான்அதிபர் அஷ்ரப் கனி நாட்டைவிட்டு வெளியேறியுள்ளார். இந்த நிலையில் அங்குள்ள பெண்களை தலீபான்கள் அடிமைப்படுத்த தொடங்கியுள்ளனர். இதுகுறித்து அங்குள்ள மனித உரிமை ஆர்வலர்கள் கூறியதில் “கடந்த 2006ம் ஆண்டு முதல் 2001 வரை ஆப்கான் தலீபான்களின் கட்டுப்பாட்டில் இருந்த பொழுது பெண்களுக்கான அதுவும் குறிப்பாக 12 வயதுக்கு மேற்பட்ட பெண்களுக்கான கல்வி மற்றும் வேலை மறுக்கப்பட்டது.

அவர்கள் ஆண்துணை இல்லாமல் எந்த ஒரு பெண்ணும் வெளியே செல்வதற்கு அனுமதி கிடையாது. மேலும் உடலை மறைக்கும் ‘பர்தா’ என்ற ஆடையை அணியும் முறையும் வழக்கத்தில் இருந்தது” என்று கூறியுள்ளனர். தற்போது மீண்டும் ஆப்கானிஸ்தான் தலீபான்களின் கட்டுப்பாட்டுக்குள் வந்துள்ளது. இவர்கள் கடந்த ஜூலையில் பதாக் ஷான் மற்றும் தக்கார் மாகாணங்களை கைப்பற்றி அங்குள்ள மத தலைவர்களிடம் 15 வயதுக்கு மேற்பட்ட பெண்கள், 45 வயதுக்கு உட்பட்ட விதவை பெண்கள் ஆகியோரின் பட்டியலை கேட்டு வாங்கியுள்ளனர். இந்த பட்டியலானது பெண்களை கட்டாய திருமணம் செய்வதற்காக வாங்கி உள்ளதாக தகவல் வெளியானது.

மேலும் கட்டாய திருமணம் செய்து பெண்களை பாலியல் ரீதியாக அடிமைப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. குறிப்பாக திருமணம் செய்து வைப்பதாக இளைஞர்களை தீவிரவாதிகள் தூண்டி வருகின்றனர். இது போன்ற நடவடிக்கையானது பெண்களின் சுதந்திரத்தைப் பறிப்பது மட்டுமின்றி மனித உரிமை மீறலாகும். இதனால் கடந்த சில மாதங்களில் மட்டும் 9 லட்சத்திற்கும் மேற்பட்ட பெண்கள் நாட்டிற்குள்ளேயே புலம் பெயர்ந்துள்ளனர். அதிலும் பெண்கள் மீது பலாத்காரம், அடிமைப்படுத்துதல், கட்டாயப்படுத்தப்பட்ட விபச்சாரம் போன்ற வன்முறை செயல்களிலிருந்து அவர்கள் பாதுகாக்கப்பட வேண்டும்.

Contact Us