இரவு பார்ட்டியில் முத்த மழையில் சமந்தா.. அவரே வெளியிட்ட புகைப்படங்கள்

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக இருப்பவர் சமந்தா. இவரது நடிப்பில் வெளியாகும் படங்கள் அனைத்துமே சமீப காலமாக நல்ல வரவேற்பு பெற்று வருகின்றன. அதனால் தொடர்ந்து பல இயக்குனர்களும் சமந்தாவை வைத்து படங்களை இயக்கி வருகின்றனர்.

தற்போது சமந்தா முக்கியத்துவம் உள்ள கதைகளில் மட்டுமே தேர்ந்தெடுத்து வருகிறார். மேலும் சமந்தா தொடர்ந்து வெப்சீரிஸ் ட்நடித்து வருகிறார். திரைப்படங்களை விட வெப்சீரிஸ் அதற்கு ரசிகர்கள் ஆதரவு அதிகமாக இருப்பதால் தற்போது சமந்தாவும் வெப்சீரிஸ் பக்கம் திரும்பியுள்ளார்.

சமந்தா விக்னேஷ் சிவன் இயக்கத்தில் காத்து வாக்குல 2 காதல் எனும் படத்தில் நடித்து வருகிறார். இது தவிர தெலுங்கிலும் ஒரு சில படங்களில் நடித்து வருகிறார். தற்போது பிசியாக நடித்து வரும் சமந்தா பல்வேறு நிகழ்ச்சிகளிலும் கலந்து கொண்டு வருகிறார்.

தற்போது சமந்தா அவரது சமூக வலைதளப் பக்கத்தில் தனது நண்பர்களுடன் இரவு விருந்தில் கலந்து கொண்ட புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். இதில் சமந்தா அவரது நண்பர்களுக்கு கண்ணத்தில் முத்தம் கொடுக்கிறார். மேலும் இந்த விழாவில் சமந்தா சந்தோசமாக இருப்பதாக ரசிகர்கள் கூறி வருகின்றனர்.

சமீபகாலமாக நடிகைகள் பலரும் சமூக வலைதள பக்கத்தில் வெளிப்படையாகவே செய்து வரும் விஷயங்களை வெளியிட்டு வருகின்றனர். அந்த வரிசையில் தற்போது சமந்தாவும் இடம் பிடித்துள்ளார். தற்போது இவர் பதிவிட்டுள்ள இப்புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Contact Us