பாரதி கண்ணம்மா சீரியலில் இருந்து விலகிய முக்கிய பிரபலம்.. அடேங்கப்பா! இத்தன பட வாய்ப்புகளா.?

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் அனைத்து சீரியல்களும் மக்கள் மத்தியில் பிரபலமாகும். அவற்றில் மிகவும் முக்கியமான சீரியல் என்றால் பாரதி கண்ணம்மா தான். என்னதான் ஒருபக்கம் இத்தொடர் பிரபலமாகி இருந்தாலும் மற்றொருபுறம் நெட்டிசன்கள் இத்தொடரை வச்சு செய்தனர். இத்தொடர் குறித்த ட்ரோல்களும், மீம்களும் இணையத்தில் வைரலானது.

தற்போது விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கும் நிலையில் இத்தொடரில் இருந்து முக்கிய நடிகர் ஒருவர் விலகுவதாக அறிவித்துள்ளார். இத்தொடரில் அகிலன் என்ற முக்கிய கதாபாத்திரத்தில் அகிலன் புஷ்பராஜ் நடித்து வந்தார். இந்நிலையில் சீரியலின் இரண்டாவது கதாநாயகனான அகிலன் அந்த கதாபாத்திரத்திலிருந்து தற்போது விலகியுள்ளார்.

அகிலன் புஷ்பராஜ் சின்னத்திரையில் அறிமுகமாயிருந்தாலும், அவருக்கு வெள்ளித்திரையில் நடிக்க வேண்டும் என்பதே கனவாக இருந்தது. தற்போது அந்த கனவு நிறைவேறியுள்ளது. ஏற்கனவே நடிகர் பிரபுதேவாவுடன் இணைந்து புதிய படத்தில் நடித்து வந்த அகிலன், ஷூட்டிங் ஸ்பாட் புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் வெளியிட்டு வந்தார்.

இந்நிலையில் தற்போது அவருக்கு அடுத்தடுத்து பட வாய்ப்புகள் வருகின்றன. எனவே, பாரதி கண்ணம்மா சீரியலுக்கான சரியான கால்ஷீட்டை கொடுக்க இயலவில்லை. இதன் காரணமாகவே அவர் தொடரிலிருந்து விலகியுள்ளார். அவருக்கு பதிலாக சுகேஷ் என்ற புது நடிகர் அகிலன் கதாபாத்திரத்தில் தற்போது நடித்து வருகிறார்.

அகிலன் தற்போது பீட்சா 3, விஷாலுடன் இணைந்து ஒரு படம் மற்றும் பெரிய தயாரிப்பு நிறுவனங்கள் தயாரிக்கும் இரண்டு படங்கள் என நான்கு படங்களில் கமிட்டாகி பிசியாக நடித்து வருகிறார். இதன் காரணமாகவே சீரியலில் இருந்து விலகியுள்ளதால் ரசிகர்கள் அகிலனுக்கு தங்களது பாராட்டுக்களை தெரிவித்து வருகின்றனர்.

 

Contact Us