3மாத குழந்தை பிறப்புறுப்பில் ரத்தம் வந்து கவலைக்கிடம்- 17 வயது சிறுவன் செய்த கொடுமை

 

என்னதான் போக்சோ சட்டம் வந்து கடுமையான தண்டனைகள் அளிக்கப்பட்டு வந்தாலும்கூட தினம் தினம் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்படுபவர்கள் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே தான் இருக்கிறது. பாலியல் வன்கொடுமை குற்றங்களும் குறைந்தபாடில்லை. அதுவும் பச்சிளம் குழந்தைகளும் இந்த கொடுமைக்கு ஆளாகும் நிலை அதிகரித்துக் கொண்டே தான் செல்கிறது. 3 வயது பெண் குழந்தை 17 வயது சிறுவனால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டதில் அந்த குழந்தை கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறது. உத்தரபிரதேச மாநிலத்தில் இட்டா மாவட்டத்தில் இருக்கும் பல்வாலா பகுதியில்தான் இந்த கொடூர சம்பவம் நிகழ்ந்திருக்கிறது.

பல்வாலா பகுதியில் உள்ள ஒரு வீட்டில் 3 மாத பெண் குழந்தை இருந்தது. வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் எருமை மாடுகளை கட்டி வைப்பதற்காக செல்ல வேண்டிய அவசியம் இருந்தது. இதையடுத்து குழந்தையை வீட்டில் படுக்க வைத்துவிட்டு எருமை மாடுகளை கட்டி வைப்பதற்காக சென்றார் அந்தத் தாய். இதை நோட்டமிட்ட அதே பகுதியில் வசித்து வந்த 17 வயது சிறுவன் திடீரென்று வீட்டுக்குள் புகுந்து இருக்கிறான்.

எருமை மாடுகளை கட்டி விட்டு வீட்டுக்குள் வந்த போது தாய்க்கு ஒரே அதிர்ச்சி. குழந்தை இதுவரைக்கும் இல்லாதபடி அலறி இருக்கிறது. என்னவென்று பதறி ஓடி வந்திருக்கிறார். அப்போது அந்த சிறுவன் குழந்தையை கையில் வைத்துக் கொண்டு சமாதானப்படுத்திக் கொண்டு இருந்திருக்கிறான். என்னவென்று கேட்டு பதறி துடித்து இருக்கிறார் தாய்.

சிறுநீர் கழித்துவிட்டாள் அதன் அழுகிறாள் என்று சொல்லி இருக்கிறான் அவன். தாய் குழந்தையை வாங்கியதும் அவன் அங்கிருந்து சென்று விட்டான். அப்போதுதான் குழந்தையின் பிறப்பு உறுப்பை கவனித்திருக்கிறார் தாய். பிறப்பிறுப்பில் இருந்து ரத்தம் வந்து கொண்டிருந்திருக்கிறது. இதனால் பேரதிர்ச்சிக்குள்ளான தாய் ஏதோ விபரீதம் நடந்திருக்கிறது என்பதை உணர்ந்து உடனே மருத்துவமனைக்கு தூக்கிச் சென்றிருக்கிறார். அங்கே குழந்தையை பரிசோதித்த மருத்துவர்கள் குழந்தை பாலியல் வன்புணர்வு செய்யப்பட்டு இருக்கிறது என்பதை தெரிவித்துள்ளனர். மேலும் குழந்தை ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறது.

இதையடுத்து ஆத்திரம் கொண்ட அந்த தாய் பல்வாலா காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இதையடுத்து சிறுவன் மீது பாலியல் வன்புணர்வு , போஸ்கோ உள்ளிட்ட சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர். சிறுவனின் தாய் போலீசில் புகார் கொடுக்கச் சென்ற விவரம் தெரிந்ததும் அந்த சிறுவன் தலைமறைவாகிவிட்டான். அவனைப் பிடிப்பதற்காக 4 சிறப்பு தனிப்படைகள் அமைக்கப்பட்டு தேடிவருகின்றனர்.

3வயது குழந்தை பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வரும் நிலை உத்தரபிரதேச மாநிலத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கிறது.

Contact Us