தயவு செய்து எங்களை கூட்டிச் செல்லுங்கள் கதறும் ஆப்கான் சிறுமிகள்: முள்ளிவாய்க்காலை விடவும் பெரும் அவலம் !

காபூல் விமான நிலையத்தை நெருங்கிக் கொண்டு இருக்கும் தலிபான்களிடம் இருந்து தப்பிக்க. பல நூறு சிறுமிகள் போராடி வருகிறார்கள். அமெரிக்க ராணுவம் வெட்டிரும்பு கதவுகளை போட்டு மூடி வைத்துள்ளது. எவரும் உள்ளே செல்ல முடியாது. இன் நிலையில் எங்களை காப்பாற்றுங்கள் தயவு செய்து காப்பாற்றுங்கள் என்று இரவும் பகலுமாக சிறுமிகள் விமான நிலைய வாசலில் கதறி அழுகிறார்கள். தலிபான்கள் அவ்விடத்திற்கு வந்தால், அவர்களை செக்ஸ் அடிமைகளாக பிடித்துச் சென்று விடுவார்கள் என்பது 100 விகிதம் அவர்களுக்கு தெரியும். என்ன நடந்தது என்று தெரியவில்லை… ஆனால் தலிபான்கள் கடைசி கட்ட தாக்குதலை நடத்தவில்லை… வெளிநாட்டவர்கள் தப்பிச் செல்ல ஏதுவாக..

தமது தாக்குதல்களை நிறுத்தி வைத்துள்ளார்கள். இதனால் சுமூகமாக வெளிநாட்டவர்கள் வெளியேறிக்கொண்டு இருக்கிறார்கள். இன் நிலையில் மேலும் 1,000 ஆப்கான் அகதிகளையும் சிறுமிகளை ஏற்றி அவர்களை பாதுகாப்பான ஒரு நாட்டில் விடுவதற்கு இன்று பிரித்தானியா தனது 2 கார்கோ விமானங்களை அனுப்பு உதவியுள்ளது. இந்த நடவடிக்கையை, உலக நாடுகள் பாராட்டியுள்ளார்கள். ஆப்கான் வான் பரப்புக்கு மேல் இனி சர்வதேச விமானங்கள் பறக்க தடை உள்ளது. அவர்கள் எந்த நேரம் வேண்டும் என்றாலும் விமானங்களை சுட்டு வீழ்த்த முடியும். அப்படி இருந்தும் பிரித்தானியா 2 விமானங்களை அனுப்பி, மனிதனேய உதவிகளை செய்வது மிகப் பெரிய காரியம்.

Contact Us