169 மில்லியன் டாலர்களோடு நாடு நாடாக பறந்த ஆப்கான் பிரதமர் கணி: ஹெலியில் முழு காசையும் ஏற்ற முடியவில்லை !

கடந்த ஞாயிறு அன்று ஆப்கான் நாட்டில் இருந்து, அன் நாட்டு பிரதமர் வெளிநாடு நாடு ஒன்று சென்றுள்ளார் என்ற செய்தி வெளியாகியுள்ள நிலையில். அமெரிக்க ஜனாதிபதியின் காவலர்கள் என்று அழைக்கப்படும் சீக்கிரன் சர்விஸ் பிரிவினரே, இது நாள் வரை கணிக்கு பாதுகாப்பு வழங்கி வந்தார்கள். ஆனால் அவர்கள் பாதுகாப்பு தனக்கு வேண்டாம் என்று கூறிய கணி, ஞாயிற்றுக் கிழமை, துருப்பு காவி ஹெலி ஒன்றில் சுமார் 169 மில்லியன் அமெரிக்க டாலர்களை பணமாக ஏற்றியுள்ளார். மிகுதிப் பணத்தை அவரால் அந்த ஹெலியில் ஏற்ற முடியவில்லை. அவ்வளவு பாரம் தான் அது தாங்க வல்லதாம். முதலில் உஸ்பாக்கிஸ்தான் நோக்கி அவர் ஹெலி பயணித்துள்ளது. ஆனால் அன் நாடு அவரை ஏற்க்க மறுத்த நிலையில்…

திடீரென அவரது ஹெலி ஓமான் நாடு நோக்கிச் சென்று இறுதியில் சவுதி அரேபியாவின் டுபாயில் இறங்கியுள்ளார். டுபாய் அவருக்கு அகதிகள் அந்தஸ்த்தை உடனடியாக வழங்கியுள்ளதாக தற்போது செய்திகள் வெளியாகியுள்ளது. இந்த அளவு பணத்தை இவர் எப்படி பதுக்கி வைத்திருந்தார் என்பது தெரியவில்லை. அமெரிக்கா உட்பட பல உலக நாடுகள், ஆப்கானிஸ்தான் அபிவிருத்திக்காக கொடுத்த பணத்தை இவர் செலவு செய்யாமல், அதனை அமெரிக்க டாலர்களாக மாற்றி வைத்திருந்துள்ளார். இந்த 20 வருடங்களில் ஆப்கான் நாடு எந்த ஒரு வகையிலும் முன்னேறவில்லை.

இது இவ்வாறு இருக்க ஆப்கான் நாட்டின் துணை பிரதமர் அன் நாட்டை விட்டு வெளியேற மறுத்து விட்டார். வாழ்வோ சாவோ நான் ஆப்கானில் தான் இருப்பேன் என்று கூறிய நிலையில். அவருக்கு ஆதரவு வலுப்பெற்றுள்ளது. இன்னும் சில நகரங்கள் ஆப்கான் நாட்டு, ராணுவத்தின் கட்டுப்பாட்டில் உள்ளது, குறிப்பிடத்தக்க விடையம் ஆகும். அன் நகரங்களில் ஒன்றில் தான் துணை பிரதமர் இன்றுவரை வசித்து வருகிறார்.

Contact Us