உயிர் பிழைத்ததே பெரிய விஷயம்., இதுல பேசுற பேச்ச பாரு.! யாஷிகாவை வெளுத்து வாங்கும் நெட்டிசன்கள்

பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் பிரபலமான மாடல் அழகி யாஷிகா ஆனந்த், கடந்த சில நாட்களுக்கு முன்பு சென்னை-மாமல்லபுரம் அருகே நடந்த கார் விபத்தில் படுகாயமடைந்து தற்போது வீடு திரும்பியுள்ளார். இந்த விபத்தில் அவருடைய தோழியான பவானி என்ற பெண் பலியானார்.

இதனால் யாஷிகாவின் மீது, காரை வேகமாக ஓட்டியது, உயிர்சேதம் ஏற்படுத்தியது உள்ளிட்ட மூன்று வழக்குகள் பதியப்பட்டது. கார் விபத்து ஏற்பட்ட பிறகு தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இருக்கும் புகைப்படங்களை அழித்தார் யாஷிகா ஆனந்த். இதைத்தொடர்ந்து தற்போது நீண்ட நாட்களுக்கு பிறகு இன்ஸ்டாகிராம் பக்கத்தில் முதன்முதலாக உருக்கமான பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார் யாஷிகா. அதில் தன்னுடைய தோழி பவானியை மிஸ் பண்றேன் என்றும்,

தன்னுடைய இடுப்பு மற்றும் காலில் எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளதாகவும், இன்னும் 5 மாதத்திற்கு நிற்கவோ நடக்கவோ முடியாது என்றும், இயற்கை உபாதை கூட படுக்கையில் தான், நல்லவேளை முகத்தில் எந்த காயமும் ஏற்படவில்லை என்று தன்னுடைய மனதை தேற்றிக் கொண்டுள்ளார் யாஷிகா.

இந்தப் பதிவை தொடர்ந்து யாஷிகா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தான் உடற்பயிற்சி செய்து கொண்டிருந்த வீடியோ ஒன்றை பதிவிட்டு அதனுடன், ‘தற்போது இருக்கும் சூழ்நிலையில் இதை என்னால் செய்ய முடியாது!’ என்று புலம்பியுள்ளார். இந்தப் பதிவைப் பார்த்த நெட்டிசன்கள், ‘இப்படிப்பட்ட கோர விபத்தில் இருந்து உயிர் பிழைத்ததே பெரிய விஷயம், இதுல உடற்பயிற்சி செய்யாமல் இருப்பது ரொம்ப கவலையா இருக்கா?’ என்று திட்டி தீர்த்து வருகின்றனர்.

 

 

Contact Us